பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா – 15.07.2020 – காலை 9.30 மணி

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 15.07.2020 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சேனா பவன் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைச் செயலாளர் திரு ஜி.என்.டி. இளங்கோவன், பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், இணைப் பொருளாளர் திரு இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு கே.எஸ். முரளி, திரு ஆ. வெங்கடேசன், திரு எஸ். சுவாமிநாதன், முன்னாள் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், முன்னாள் துணைத் தலைவர் திரு கி. பென்னேஸ்வரன் மற்றும் தில்லி வாழ் தமிழ் மக்கள் ஆர்வமுடன் பெருமளவில் பங்கேற்றனர்.

Author: Site Admin