திருவள்ளுவர் தினம் – மலரஞ்சலி

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி 16.01.2020 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆ. வெங்கடேசன், திரு கே.எஸ். முரளி, திரு ஆர். ராகேஷ், திரு பி. பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.