நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்

17.01.2020 வெள்ளிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மத்திய அரசின் தென்னக பாண்பாட்டு மையத்தின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாட்டுப்புறக் கலைஞர்களையும், கலைஞர்களின் ஒருங்கிணைப்பாளர் கலைமாமணி சோமசுந்தரம் அவர்களையும் சங்கத்தின் தலைவர் திரு வி. ரெங்கநாதன், துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி தி. தேன்மொழி, திருமதி ஜோதி இராமநாதன், திரு ஆ. வெங்கடேசன், திரு கே.எஸ். முரளி, திரு பி. பரமசிவம், திரு ஆர். கணேஷ்,  திரு ஆர். ராகேஷ், திரு எஸ். சுவாமிநாதன் மற்றும் காத்திருப்பு திருமதி என். ராஜலட்சுமி ஆகியோர் கெளரவித்தார்கள்.