பொங்கல் திருநாள் பட்டிமண்டபம் மற்றும் பாராட்டு விழா

18.01.2020 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழக்கறிஞர் திரு த. இராமலிங்கம் அவர்களின் தலைமையில் குழந்தையின் சிறப்பான வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருப்பது தாயின் பாசமா? தந்தையின் கண்டிப்பா என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெற்றது. திரு ப. அறிவொளி, செல்வன் த. திருமாறன் ஆகியோர் தாயின் பாசமே என்ற தலைப்பிலும், திரு மா. சிதம்பரம், செல்வன் வி. யோகேஷ்குமார் ஆகியோர் தந்தையின் கண்டிப்பே என்ற தலைப்பிலும் பேசினார்கள். மற்றும் சமீபத்தில் நடைபெற்ற அகில இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தொழிற்சங்க தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு இரா. முகுந்தன் அவர்களுக்கும், அகில இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தொழிற்சங்க தேர்தலில் தேசிய செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு எம். சத்தியமூர்த்தி அவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைச் செயலாளர் திரு ஜி.என்.டி. இளங்கோவன், பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி தி. தேன்மொழி, திருமதி ஜோதி இராமநாதன், திரு ஆ. வெங்கடேசன், திரு கே.எஸ். முரளி, திரு பி. பரமசிவம், திரு ஆர். ராகேஷ், திரு எஸ். சுவாமிநாதன், திரு ஏ.வி. முனியப்பன் மற்றும் காத்திருப்பு உறுப்பினர் திருமதி என். ராஜலட்சுமி ஆகியோர் பேச்சாளர்களையும், திரு இரா. முகுந்தன், திரு என். சத்தியமூர்த்தி ஆகியோரையும் கெளரவித்தார்கள்.