பக்தி மாலை

01.02.2020 அன்று நடைபெற்ற பக்தி மாலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்கா இசை ரசிகர்களுடன் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன் மற்றும் நிர்வாகிகள்.

01.02.2020 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திருமதி சுதா ரகுராமன் குழுவினரின் பக்தி மாலை நடைபெற்றது. திரு ஜி. ரகுராமன் புல்லாங்குழலும், கும்பகோணம் திரு என். பத்மநாபன் மிருதங்கமும், தில்லி திரு ஆர். ஸ்ரீதர் வயலினும், திரு சம்புநாத் பட்டாசார்ஜீ தபேலாவும் பக்கவாத்தியங்களாக வாசித்தார்கள். சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்நாதன், துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைச் செயலாளர் திருமதி ஜோதி பெருமாள், இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஜோதி இராமநாதன், திரு கே.எஸ். முரளி, திரு ஆர். கணேஷ் மற்றும் காத்திருப்பு உறுப்பினர் திருமதி என். ராஜலட்சுமி ஆகியோர் கலைஞர்களை கெளரவித்தார்கள்.