சிறப்புச் சொற்பொழிவு – 08-03-2020

08.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் மதுரை செந்தமிழ் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ரேவதி சுப்பு லெட்சுமி அவர்கள் யாதுமாகி நின்றாய் என்ற தலைப்பில் சர்வதேச மகளிர் தின சிறப்புச் சொற்பொழிவாற்றினார். சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன் அவர்கள் பேச்சாளாரை கெளரவித்தார். உடன் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைச் செயலாளர் திரு ஜி.என்.டி. இளங்கோவன், பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி தேன்மொழி முத்துகுமார், திரு ஆ. வெங்கடேசன், திரு ஆர். கணேஷ், திரு பி. பரமசிவம் உள்ளிட்டோர். இந்த நிகழ்ச்சியில் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் முதன்மை இயக்குநர் திருமதி இரா. வனிதா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.