வ.உ .சி. பிறந்தநாள் விழா மற்றும் ஆசிரியர் தின விழா

05.09.2020 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அமரர் எஸ். ராஜேந்திரன் மற்றும் அமரர் எஸ். துரை நிறுவிய வ.உ.சி நினைவு அறக்கட்டளை சார்பில் வ.உ.சி பிறந்த நாள் விழாவில் மலரஞ்சலி மற்றும் ஆசிரியர் தின விழாவில் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. அகில இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தொழிற்சங்க தலைவர் திரு இரா. முகுந்தன் அவர்களும், சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் புலவர் விஸ்வநாதன் அவர்களும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைச் செயலாளர்கள் திரு ஜி.என்.டி. இளங்கோவன், திருமதி ஜோதி பெருமாள், பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆ. வெங்கடேசன், திரு ஆர். கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.