மஹாகவி பாரதியார் நினைவு நாள் மலரஞ்சலி – 11-09-2020 – காலை 9.30 மணி

11.09.2020 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மகாகவி சுப்ரமணிய பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு பாரதி நகர், ரமண மகரிஷி மார்க்கில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தில்லிப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இணைப் பேராசிரியர், நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியவியல் துறையின் முன்னாள் துறைத் தலைவர் முனைவர் கோவிந்தசுவாமி இராஜகோபால் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கூறிய மகாகவி பாரதியார் அவர்கள், தமிழ் மொழி உடன் சேர்ந்து தேசிய மொழியான ஹிந்தி மற்றும் இதர மொழிகளையும் கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று நூறு வருடம் முன்பு அவர் கூறியதை கோடிட்டுக் காட்டினார்.

இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைச் செயலாளர் திரு ஜி.என்.டி. இளங்கோவன், பொருளாளர் திரு எம். ஆர். பிரகாஷ், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி தேன்மொழி முத்துகுமார், திரு ஆ. வெங்கடேசன், எஸ். சுவாமிநாதன், திரு ஏ.வி. முனியப்பன் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.