113 வது தேவர் ஜெயந்தி விழா – 30-10-2020

30.10.2020 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113வது ஜெயந்தி விழா தில்லித் தமிழ்ச் சங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு கே.பி. குருமூர்த்தி அவர்கள் தலைமை வகித்தார். தேவரின் சிறப்புகள் என்ற தலைப்பில் நேரலையில் சிறப்புரையாற்றிய மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் ஜாதி, மதங்களுக்கு ஆப்பாற்பட்டு விழங்கிய ஒரு தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்று புகழாரம் சூட்டினார். அப்படிப்பட்ட தெய்வீக பெருமகனாருக்கு நன்றி செலுத்தும் விதமாக மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும், அப்படி சூட்டினால் அவர்களுக்கு முத்துராமலிங்க தேவரின் ஆன்மா ஆசிர்வதிர்க்கும் என தனது உரையில் ஆத்மாத்மாக குறிப்பிட்டார். மறத்தமிழர் சேனையின் நிறுவனர் திரு சு. புதுமலர் பிரபாகரன் அவர்கள் நேரலையில் வாழ்த்துரை வழங்கினார். அவர் கூறுகையில் வாழ்நாளில் முத்துராமலிங்க தேவர் அவர்கள் கடைபிடித்த கொள்கையினால்தான் இன்று வரை நாம் அவரை நினைவு கூறுகின்றோம், அவ்வாறு நாமும் கடைபிடித்தால் அதுவே நாம் அவருக்கு செய்யும் நன்றி கடன் என்றும் அவரை நாம் உள்ளழவும் வாழ்நாளில் நினைவில் கொள்வோம் என்று சூழுரை ஆற்றினார்.

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மாணிக்கம் தாகூர் அவர்கள் நேரலையில் வாழ்த்துரை வழங்கினார். அகில இந்திய ஓவர்சீஸ் வங்கியின் தொழிற்ச் சங்கத் தலைவர் திரு இரா. முகுந்தன் அவர்கள் மேடையில் வாழ்த்துரை வழங்கியபோது ஜாதிக்காக வாழாமால் சாதித்து வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்று கூறினார். தில்லியை சேர்ந்த திரு எழிலரசு அவர்கள் மேடையில் வாழ்த்துரை வழங்கினார். திரு ராமானுஜம் அவர்கள் மேடையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றிய கவிதை வாசித்தார். மாவீரர் சசிவர்ணத் தேவர் என்ற நூலை வெளியிட்டுள்ள முனைவர் கே.வி.எஸ். மருதுமோகன் அவர்கள் நேரலையில் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் திரு மே.இரா. பிரகாஷ், தில்லியை சேர்ந்த திரு அறிவழகன், திரு மாரிச்சாமி, திரு தண்டபானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஜி.டி. நாட்டியக் பள்ளி குழுந்தைகளின் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சங்கத்தின் இணைச் செயலாளர் திரு ஜி.என்.டி. இளங்கோவன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் தொகுத்து வழங்கினார். செயற்குழு உறுப்பினர் திரு ஆ. வெங்கடேசன் அவர்கள் நன்றியுரை கூறினார்.