நினைவேந்தல் கூட்டம் – 27.12.2020 மாலை 5 மணி

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 27.12.2020 மாலை 5 மணிக்கு திருவள்ளுவர் அரங்கில் மூத்த உறுப்பினரும், மேனாள் துணைத் தலைவரும் மற்றும் பொதுச்செயலாளருமான திரு புலவர் விசுவநாதன் மற்றும் சங்க உறுப்பினர் திருமதி லலிதா நாகராஜன் அவர்களுக்கும் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. மலரஞ்சலி செலுத்தி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதில் தலைவர் வீ.ரெங்கநாதன் இணையத்தின் மூலம் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். துணைத்தலைவர் பி.குருமூர்த்தி பொதுச்செயலாளர் என். கண்ணன், இணைச்செயலாளர் ஜி.என்.டி. இளங்கோவன், மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆ.வெங்கடேசன் அஞ்சலி செலுத்தினர்.

அனைந்திந்திய தமிழ்ப்பேரவையின் பொதுச்செயலாளர் இரா.முகுந்தன், முன்னாள் பொதுச்செயலாளர் வீ.ரெங்கராஜன், பொதுச்செயலர் சக்தி பெருமாள், பொள்ளாச்சி கணேசன், நாகராஜன்,முன்னாள் கவுன்சிலர் ராஜா, திருமதி உஷா வெங்கட் ஆகியோரும், இணையத்தின் மூலம் திருமதி ரமாமணி சுந்தர், கே.வி.கே.பெருமாள், ஜெ.என்.யூ. பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் நாச்சிமுத்துஅவர்களும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தனர்.

இந்நினைவேந்தல் கூட்ட நிகழ்ச்சியை இணைப்பொருளாளர் இரா.இராஜ்குமார் பாலா அவர்கள் தொகுத்து வழங்கினார். இணைச்செயலாளர் ஜி.என்.டி. இளங்கோவன் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்தார்.