தில்லியில் திருவையாறு – 07.03.2021

07.03.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தலைநகரிலுள்ள அனைத்து இசைக் கலைஞர்களும் ஒருங்கிணைந்து தியாக பிரம்மம் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளின் இசை ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், ஐ.பி.எஸ், (ஓய்வு), துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைச் செயலாளர் திரு ஜி.என்.டி. இளங்கோவன், இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர் திரு ஆர். கணேஷ் மற்றும் சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் புகழ்பெற்ற பேச்சாளர் திரு பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர்களை கெளரவித்தார்கள்.