தேசிய விருது பெரும் திரையுலகப் பிரபலங்களுக்குப் பாராட்டு விழா – 25-10-2021

25.10.2021 திங்கட்கிழமை அன்று தேசிய விருது பெற்ற இயக்குனர், நடிகர் திரு பார்த்திபன், நடிகர் திரு விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் திரு டி. இமான் ஆகியோருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

முன்னதாக தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு என். கண்ணன் அவர்கள் வரவேற்க, தலைவர் திரு வீ. ரெங்கநாதன், இ.கா.ப (பணி நிறைவு) அவர்கள் தலைமையாற்றினார். அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், தில்லி தமிழ் அகாடமியின் துணைத் தலைவர் திரு என். ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இசையமைப்பாளர் திரு இமான் அவர்களின் ஏற்புரையில் பெற்றோர்களுடைய ஊக்கம் தான் சாதனைகள் படைப்பதற்கு உறுதுணையாக இருந்தது என்றும், விருதுக்காக செயல்படாமல் மனநிறைவுக்காக செயல்பட வேண்டும் என்றார்.

இயக்குனர், நடிகர் திரு பார்த்திபன் அவர்களின் ஏற்புரையில் ரசிகர்களின் கை தட்டல்களை நான் விருதுதாக கருதுகிறேன் என்றும், வித்தியாசமான படங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், ஒத்த செருப்பு படத்தை விரைவில் ஹிந்தியிலும், ஹாலிவுண்டிலிலும் விரைவில் தடம் பதிப்பேன் என்றார்.

சங்கத்தின் இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இறுதியாக சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி தேன்மொழி முத்துகுமார், திரு பி.ஆர். தேவநாதன், திரு கே.எஸ். முரளி, திரு ஆர். கணேஷ், திரு இரா. ராகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.