வயலின் இசை – 06.11.2021

06.11.2021 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில், சங்கப் பயிலரங்க குரு தில்லி ஆர். ஸ்ரீதர் அவர்களின் மாணவிகள் செல்வி செளம்யா கண்ணன், திருமதி உமா அருண் ஆகியோரின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கும்பகோணம் என். பத்மநாபன் மிருதங்கமும், மன்னை என். கண்ணன் கடமும், செல்வி வைஷ்னவி தாளமும் வாசித்தார்கள். சங்கத்தின் இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஜோதி ராமநாதன், திரு ப. பரமசிவம் மற்றும் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் ஆகியோர் கலைஞர்களை சிறப்பித்தார்கள். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு பி.ஆர். தேவநாதன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.