தில்லித் தமிழ்ச்சங்க செயலி

தில்லி தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்கும், உலகளாவிய தமிழ் ஆர்வலர்களுக்கும் ஓர் நற்செய்தி/அறிவிப்பு.

தில்லித் தமிழ்ச் சங்க செயல்பாடுகளையும் தமிழ் வளர்ப்பு முயற்சிகளையும் உலகளாவிய தமிழர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் நமது தில்லித் தமிழ்ச் சங்க இணைய தளம் மிகச்சிறந்த முறையில் ஆக்கப்பட்டுள்ளது தாங்கள் அறிந்ததே!

இதன் அடுத்த மைல்கல்லாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை கருத்தில் கொண்டு, உங்கள் கைபேசியிலேயே தில்லி தமிழ்ச் சங்கத்தின் அனைத்து விவரங்களையும், பயிலரங்கம் மற்றும் நடந்த, நடக்க இருக்கிற நிகழ்ச்சிகளை உங்கள் கைவிரல் நுனியில் அறியும்படி ஒர் செயலி தில்லித் தமிழ்ச்சங்கத்திற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.

இந்த மொபைல் செயலியை கூகுள் ப்ளேச்டோரில் கீழ்க்கண்ட இணைப்பில் உங்கள் ஆன்ராய்ட் மொபைலில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலி மிகக் குறைந்த (Below 5 MB) இடத்தையே ஆக்ரமிக்கும். இந்த செயலி மூலம் தில்லித் தமிழ்ச்சங்க விவரங்களையும் நிகழ்ச்சிகளையும் அறிந்து கொள்ளலாம்.

செயலி தரவிறக்க சுட்டி :

Click Here

or

Scan the below Image from your phone :

உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் கொண்டு இன்னும் பல சிகரங்களைத் தொட முடியும். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய இயலும் என்ற நம்பிக்கையோடு உங்களை தில்லித் தமிழ்ச் சங்கம் மகிழ்வுடன் இச்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

நன்றி, வணக்கம்.
தில்லித் தமிழ்ச்சங்க இணையம்