புதிய முகம்

புதிய முகமாக தில்லித் தமிழ்ச் சங்க வலைத் தளம்

ஆண்டாண்டு காலமாய்
சங்கத்தின்
தங்கமான
அங்கத்தினர்
‘ஷாஜஹான்’க்கள்
‘சேது’க்கள்
மற்றும்
சங்க நலனில் அக்கறை கொண்ட
இன்ன பிற
‘பெரும் ஆள்’களின்
தவமாகி

தமிழ்ச் சங்கம் 2020
அமைப்பதற்கு ஓர்
எருவாகி

பென்னேஸ்வரனின்
எண்ணப்
பட்டறையில்
கருவாகி

சங்கத் தலைவர்
இந்து பாலா
செயலாளர் முகுந்தன்
செயற்குழு உறுப்பினர்கள்
இந்த நோக்கத்தில் ஏக
மனதாகி

நாளொரு மேனியும்
பொழுதொரு
வண்ணமுமாக
உருவாகி

நாக. சுந்தரம்
கைவண்ணத்தில்
கலையழகோடு
வடிவாகி

உழைப்பாளர் மாதத்தின்
ஒன்பதாம்
நாளன்று
உயிராகி

தமிழ்ப் புகழ் பாடும்
திருப்புகழ் தம்
திருக்கரத்தால்
வெளியாகி

‘வெளிப்படைத்
தன்மை’யின்
இன்னுமோர்
மைல்கல்
நனவாகி

சாதனை படைப்பதே இதன்
அணியாகி

புதுப்
பொலிவோடும்
மிளிர்வோடும்
நடைபோடும்

சங்க வலைத்தளத்தை
http://www.delhitamilsangam.in/

விஜயம் செய்வீர்
விரைந்தே இன்று

பார்வையிடுவீர்
பல பொக்கிசங்களை

பருகிடுவீர்
தமிழமுதத்தை

பதிவிடுவீர்
பயனுள்ள நல்
கருத்துக்களை
dhilltamilsangam@gmail.com

பகிர்ந்திடுவீர்
பலரோடும்
சங்க வலைத்தள
முகவரியை
http://www.delhitamilsangam.in/

பரப்பிடுவீர்
பாரெங்கும்
தில்லித் தமிழ்ச்
சங்கப் புகழ்தனையே

தமிழ் வாழ்க!!!
தமிழ் வாழத்
தமிழர் வாழ்க.

பொ. சங்கர்
தி.த.ச. உறுப்பினர்

***