செயலாளர்கள்
எண் | பெயர் | செயலர்(காலம்) | இதர பொறுப்புகள் | பிற குறிப்புகள் | ||
1. | அமரர் திரு.அ.வி.குப்புசாமி |
![]() |
6.7.1947 – 19.9.48 24.6.1950–8.6.1952 11.3.1956-31.3.1957 5.7.1959-1.6.1960 | துணைத்தலைவர் 19.5.1968-2.5.1970 18.5.1980-18.4.1982 18.4.1982-15.5.1983 15.5.1983-23.5.1986 | சங்கம் நிறுவிய துங்கர்களில் ஒருவர். முதல் செயலர். நான்கு முறை செயலராகவும் துணைத்தலைவராக இருந்தவர். சங்க வெள்ளிவிழா சிறப்பாக நடத்த பெரும் உதவி செய்தார். 1968ம் ஆண்டு 2வது உலகத்தமிழ் மாநாட்டில் சங்கப்பிரதிநிதியாக பங்கேற்ற பெருமைக்குரியவர். | |
2. | திரு.ச.மகாதேவன் |
![]() |
19.9.1948-1.6.1949 | செயலாளராக சிறப்பாகப் பணியாற்றியவர் | ||
3. | திரு.வ.ரா.சீனிவாசன் |
![]() |
1.6.1949-24.6.1950 | செயலாளராக சிறப்பாகப் பணியாற்றியவர் | ||
4. | திரு ஆர்.ரங்கராஜன் |
![]() |
8.6.1952-19.7.1953 19.2.1955-11.3.1956 | துணைத்தலைவர் 20.2.1966-5.2.1967 | சங்கம் நிறுவிய தூண்களில் ஒன்று என்று கூறலாம். | |
5. | அமரர் ஓ.என்.நாகரத்தினம் |
![]() |
19.7.1953-19.2.1955 | 2 ஆண்டுகாலம் செயலாளராகப் பணியாற்றியவர். 1953ம் ஆண்டு ரீகல் திரைஅரங்கில நடைபெற்ற தமிழ்மாநாட்டை சிறப்பாக நடத்திய பெருமைக்குரியவர் | ||
6. | திரு ஆர்.எஸ்.வெங்கட்ராமன் |
![]() |
31.3.1957-5.1.1958 | துணைத்தலைவர் | சிறந்த எழுத்தாளரும் பேச்சாளரும் சிறந்த நிர்வாகியும் ஆவார். | |
7. | அமரர் திரு எஸ்.சீனிவாசன் |
![]() |
5.1.1958-5.7.1959 | துணைத்தலைவர் 5.7.1959-1.6.1960 1.6.1960-29.1.1961 31.1.1965-20.2.1966 | சிறந்த நிறுவன நிர்வாகியாகத் திகழ்ந்தவர் | |
8. | டாக்டர் டி.பி.சித்தலிங்கம் |
![]() |
1.6.1960-29.1.1961 | சங்க விதிமுறைகளையொட்டி செயல்பட்டவர். | ||
9. | திரு ஆர்.எஸ்.வெங்கடேசன் |
![]() |
29.1.1961-28.1.1962 28.1.1962-27.1.1963 27.1.1963-9.2.1964 | வட்டாரச்செயலர் 31.1.1965-20.2.1966 செயற்குழு உறுப்பினர் 9.2.1964-31.1.1965 | சிறந்த பேச்சாளர். சங்கத்தின் முதல் கட்டிடம் உருவாக பெரிதும் பாடுபட்டவர் | |
10. | திரு எஸ்.ஜெயராம் |
![]() |
9.2.1964-31.1.1965 | இணைச்செயலர் 27.1.1963-9.2.1964 வட்டாரச்செயலர் 31.1.1965-20.2.1964 | எல்லோரையும் அரவணைத்துச்செல்லும் பண்புடையவர். நல்ல நிர்வாகி | |
11. | திரு.தி.வை.நாராயண சாமி |
![]() |
31.1.1965-20.2.1966 | செயற்குழு உறுப்பினர்1.6.1960-29.1.19619.2.1964-31.1.1965 | செயலாளர் பொறுப்புடன், சங்க கணக்குகளையும் நிர்வகித்தவர் | |
12. | அமரர் டாக்டர் சாலை இளந்திரையன் |
![]() |
20.2.1966-5.2.1967 | துணைத்தலைவர் 28.1.1962-27.1.1963 27.1.1963-9.2.1964 9.2.1964-31.1.1965 செயற்குழு உறுப்பினர் 5.7.1959-1.6.1960 1.6.1960-29.1.1961 29.1.1961-28.1.1962 5.2.1967-19.5.1968 | சேதாரம் இல்லாமல் நகைசெய்ய முடியாது. சிலர் மடியாமல் பகை வெல்ல முடியாது என்று கூறி அனைவருக்கும் தைரியம் ஊட்டி சிறப்பாக செயல்பட்டவர். தில்லித் தமிழ்ச்சங்க வெள்ளிவிழா மலரின் ஆசிரியராகப் பணியாற்றியவர். மலரின் தமிழ்ப்பகுதி மதுரை-காமராஜர் பல்கலைக்கழக முதுகலைப்பட்டத் துணைப்பாடமாக சிலகாலம் இருந்ததே சங்க மலரின் ஆசிரியருக்கு பெருமையை சேர்த்த்து. அறிவு இயக்கம் பத்திரிகையின் ஆசிரியர். பேச்சாளர், எழுத்தாளர். | |
13. | திரு புலவர் விஸ்வநாதன் |
![]() |
5.2.1967-19.5.1968 | துணைத்தலைவர் 23.5.1986-16.7.1989 16.7.1989-24.11.1991 பொருளாளர் 28.1.1962-27.1.1963 27.1.1963-9.2.1964 இணைச்செயலர் 19.5.1980-18.4.1982 வட்டாரச்செயலர் 20.2.1966-5.2.1967 25.4.1971-23.4.1978 செயற்குழு உறுப்பினர 5.7.1955-1.6.1960 9.2.1964-31.1.1965 31.1.1965-20.2.1966 18.4.1982-15.5.1983 23.5.1956-16.7.1959 | மூன்றுமுறை சங்கச்சுடர் பொறுப்பாசிரியராகஇருந்தவர். சென்னையில் நடந்த 2-ம் உலகத் தமிழ்மாநாட்டிற்கு சங்கத்தின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர். இன்றும் தமிழுக்காகவும் சங்கத்திற்காகவும் அதன் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபட்டவர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். | |
14. | அமரர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
![]() |
19.5.1968-3.5.1970 24.11.1991-8.5.1994 8.5.1994-30.7.1995 30.7.1995-27.7.1997 2004-2006 | தலைவர் 2009-2011 துணைத்தலைவர் 27.7.1997 | இணைச்செயலராக 19 ஆண்டுகள் செயலாளராகப் பத்தாண்டுகள் துணைத்தலைவராக 2 ஆண்டுகள் தலைவராக 2 ஆண்டுகள் பொறுப்பு வகித்த திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி சாதாரண உறுப்பினராக சேர்ந்து தலைவர் பதவிக்கு உயர்ந்த தொண்டர்.தமிழ்ச்சங்கம் கிருஷ்ணமூர்த்தி என்றும் சங்கத்தாத்தா என்றும் அன்புடன் அழைக்கப்படுபவர். | |
15. | திருஎஸ்.ரங்கராஜன் |
![]() |
25.4.1971-23.4.1978 | இவர் செயலராக இருந்தபோதுதான் சங்கம் வெள்ளிவிழா கொண்டாடியது. ஏழு ஆண்டுகள் தொடர்ந்து செயலராக இருந்தவர் | ||
16. | திரு.ஆர்.வேங்கடகிரி |
![]() |
23.4.1978-18.5.1980 18.5.1980-18.4.1982 18.4.1982-15.5.1983 15.5.1983-23.5.1986 23.5.1986-16.7.1989 16.7.1989-24.11.1991 | இணைச்செயலர் 25.4.1971-23.4.1978 வட்டாரச்செயலர் 5.2.1997-19.5.1978 செயற்குழு உறுப்பினர் 31.5.1965-20.2.1966 24.11.1991-8.5.1994 | ராமருக்கு வனவாசம் 14 ஆண்டுகள். அதன் விளைவு நல்ல இராமாயணம். அதுபோல இவரும் 14 ஆண்டுகாலம் செயலாளராக சிறப்பாகப் பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். சங்கத்தின் அரங்கம் உருவாக பெரும்பாடு பட்டவர். தமிழ் ஆர்வலர். நல்ல பேச்சாளர் திரு ஆர்.வேங்கடகிரி அவர்கள். | |
17. | திரு எம்.என்.எஸ்.மணியன் |
![]() |
30.7.1995-27.7.1997 27.7.1995-1996 2000-2001 | செயற்குழு உறுப்பினர் 27.1.1963-9.2.1964 18.4.1962-15.5.1983 | இவரது காலம் பொற்காலம், பொன்விழாகாலம்.இவரது காலத்தில்தான் திருவள்ளுவர் கலையரங்கம் கட்டி முடித்து முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. | |
18. | திரு எம்.பொன்னையன் |
![]() |
2001-2002 | காக்கிச்சட்டைக்குள் இருந்த ஒரு கவிக்குயில். நல்ல தமிழ் ஆர்வலர். சிறந்த பேச்சாளர். எழுத்தாளர். சிறிது காலமே செயல்பட்டாலும் சிறப்பாகச்செயல்பட்டவர். | ||
19. | திரு இரா.முகுந்தன் |
![]() |
2002-2004 2006-2009 2011-2014, 2016-2019 | மூன்றாவது முறையாக சங்கத்தின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். உழைப்பாளி. அனைவரையும் அரவணைத்துச் செல்பவர். | ||
20. | திரு சக்தி பெருமாள் |
![]() |
2009-2011 | பல்சுவை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செயதவர். தமிழ் இலக்கிய மாநாடு நடத்திய பெருமைக்குரியவர். | ||
21 | திரு என். கண்ணன் |
![]() |
2014 முதல் 2016 வரை 2019-2022 | சிறந்த நிர்வாகத் திறன் கொண்டவர். கலை, இசை ஆகியவற்றில் பெரும் ஆர்வம் கொண்டவர். கலைஞர்களின் திறமையை அறிந்து பெரும் ஊக்கம் அளிப்பவர். டி.டி.கே. நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் நூற்றுக்கணக்கான ஊழியர்களைத் திறம்பட நிர்வாகித்து வருபவர். பிரபல மருத்துவமனைகளுடன் தொடர்புள்ள இவர், பலருக்கு உதவி செய்து வருகிறார். | ||
22 | திரு. இரா. முகுந்தன் |
![]() |
தற்போதைய செயலர் | எளிமையும், எவரும் போட்டிக்கு நிற்கமுடியாத வகையில் சுறுசுறுப்பும், பிறர்நலம் போற்றும் மேன்மைப் பண்பும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆற்றலும் இயல்பிலேயே வாய்க்கப்பெற்ற ஒருவர் தான் நமது சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. இரா. முகுந்தன் அவர்கள். விழித்து எழும்போதும் உறங்கச் செல்லும் முன்னும் கூட இவர் நினைவில் ’தமிழ்ச் சங்க நலனே’ நிழலாடும் என்பதை இவரை அறிந்த அனைவரும் அறிவர். பொதுச் செயலாளர் பொறுப்பில் திறம்படச் செயலாற்றி, ’திருவள்ளுவர் சிலை’ சங்க வளாகத்தில் அமைக்கப்படவும், ’தோரணவாயில்’ தோற்றப் பொலிவுடன் நிறுவப்படவும், ’தமிழ்த்தாய் விருதை’ சங்கம் பெறவும், சங்கத்தின் இணையதளம் தொடங்கப் பெறவும் வழிகோலியவர். அகில இந்திய இலக்கிய மாநாடு உள்ளிட்ட பல பெரிய விழாக்களைச் சான்றோரும் போற்றும் வகையில் சிறப்பாக நடத்தியவர். தலைநகரில் உதவி நாடுபவர்களுக்கு முதலில் தோன்றும் ஒரு பெயர் முகுந்தன். ’பயன்தூக்கார் செய்த உதவி’ போல் இவருடைய உதவியால் பலரும் பெற்ற பயன்கள் அளவிடமுடியாதவை. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் ஊழியர். அகில இந்திய ஐ.ஓ.பி. தொழிற்சங்கத் தலைவராகவும் செயலாற்றிய பெருமைமிகு செயல்வீரர். அகில இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயல் தலைவராகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியவர். மிகச் சிறந்த நிர்வாகியும், உழைப்பாளியும், மக்கள் தொடர்பில் வல்லவருமான இவர் தற்போது ஐந்தாவது முறையாக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். |