கூச்சிப்பூடி நாட்டியம் – 31.07.2022

31.07.2022 ஞாயிற்றுக்கிழமை தில்லித் தமிழ்ச் சங்கத்தில், சங்கத்தின் பயிலரங்கு குரு திருமதி சீதா நாகஜோதி மற்றும் திரு நாகஜோதி அவர்களது மாணவிகளின் கூச்சிப்பூடி நாட்டியம் நடைபெற்றது. சங்கத்தின் இணைச் செயலாளர்கள் திருமதி ஜோதி பெருமாள், திரு ஆ. வெங்கடேசன், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு கே.எஸ். முரளி, திரு பி.ஆர். தேவநாதன், திரு ரா. கணேஷ் மற்றும் திரு ப. பரமசிவம் ஆகியோர் குரு திருமதி சீதா நாகஜோதி, திரு நாகஜோதி மற்றும் மாணவிகளையும் கெளரவித்து சான்றிதழ்கள் வழங்கினார்கள்.