இரங்கல் – திரு எஸ். பட்டாபிராமன்

தலைநகர் உத்தர சுவாமிமலை ஆலயத்தின் நிறுவனராகவும் ஆலயக் குழுவின் தலைவராகவும், செயலாளராகவும் உள்ளிட்ட பல பொறுப்புக்களைத் திறம்பட வகித்து ஆன்மீகச் சேவை ஆற்றிய ”ஆன்மீகச் செம்மல்” நூறாண்டுகளைக் கடந்து இந்த மண்ணில் சேவா மூர்த்தியாக திகழ்ந்த திரு எஸ். பட்டாபிராமன் அவர்கள் காலமான செய்தி கேட்டு பெரும் துயருற்றோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ஆன்மீக அன்பர்கள், தில்லி வாழ் தமிழர்களுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

Author: Site Admin