பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி – 15.07.2021

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 15.07.2021 வியாழக்கிழமை காலை 8.45 மணிக்கு சேனா பவன் அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறையின் மத்திய இணையமைச்சர் மாண்புமிகு டாக்டர் எல். முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் உறுப்பினர் திரு கார்வேந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு விஸ்வநாதன், சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆ. வெங்கடேசன், திரு ஏ.வி. முனியப்பன், முன்னாள் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், மூத்த பத்திரிக்கையாளர் திரு கி. பென்னேஸ்வரன், பா.ஜ.க. தென்னிந்திய பிரிவின் தில்லி மாநிலத் தலைவர் திரு கே. முத்துசுவாமி, பா.ஜ.க. தென்னிந்திய பிரிவின் தில்லி மாநிலத் துணைத் தலைவர் திரு தண்டபாணி, பா.ஜ.க. தமிழக இளைஞர் அணித் துணை தலைவர் திரு ரங்கேஷ், சென்ஸார் போர்டின் உறுப்பினர் திரு ஜெயக்குமார் மற்றும் தில்லி வாழ் தமிழ் மக்கள் ஆர்வமுடன் பெருமளவில் பங்கேற்றனர்.

புது தில்லி மாநகராட்சி (என்.டி.எம்.சி) மலர் அலங்கார ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தது.