07.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் திரு வி.எஸ். கிருஷ்ணன், திருமதி மைதிலி கிருஷ்ணன் அவர்களின் பங்களிப்போடு ஆன்மீக பிரவசன வல்லுநர்கள், வேதபாடசாலை முதல்வர் & கோசம்ரக்ஷகர், மருத்துவ சேவை புரிவோர் என, ஸ்ரீ தாமோதர தீட்சிதர், ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர், ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் சார்பாக ஸ்ரீநாத் விட்டல் அவர்கள், ஸ்ரீ ஸ்ரீமுரளீதர ஸ்வாமிஜி சார்பாக முனைவர் அனந்தாச்சாரி, மாதா கேன்சர் கேர் நிறுவனர் டாக்டர் வி. துரை மற்றும் டாக்டர் விஜயஸ்ரீ மகாதேவன் ஆகியோருக்கு விருது வழங்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து திரு உ.வே. துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் “ஆதி சங்கரரின் ஷட்பதி ஸ்தோத்திரம்” என்ற தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவும் நடைபெற்றது.








நிகழ்ச்சிக்கு ஜார்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதி திரு எம். கற்பகவிநாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சங்கத்தின் துணைத் தலைவர் திரு செல்வராஜ் மகேந்திரன் வரவேற்புரையாற்றினார்.
சங்கத்தின் துணைத் தலைவர் திரு செல்வராஜ் மகேந்திரன், பொதுச் செயலாளர் திருமதி சத்யா அசோகன், இணைச் செயலாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, இணைப் பொருளாளர் திரு பாலுச்சாமி, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி சாமுண்டீஸ்வரி, திரு ஆ. வெங்கடேசன், திருமதி ரேவதி ராஜன், திரு பி.ஆர். தேவநாதன், திரு பி. ராமமூர்த்தி, திரு ஆர். கணேஷ் மற்றும் திரு வி.எஸ். கிருஷ்ணன், திருமதி மைதிலி கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு பெற்றவர்களையும், சிறப்பு விருந்தினரையும் கௌரவித்தார்கள்.
நிகழ்ச்சியை செயற்குழு உறுப்பினர் திருமதி என். சாமுண்டீஸ்வரி அவர்கள் தொகுத்து வழங்கினார். இணைச் செயலாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
தில்லி வாழ் ஆன்மீக அன்பர்கள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.





இன்று : 40
நேற்று : 78
திங்கள் : 1021
ஆண்டு : 22058
இதுவரை : 220932