ஹரி கதை நிகழ்ச்சி – 13.06.2026

13.06.2026 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இசைவானில் இளைய தாரகைகள் “அத்திகிரி சகோதரிகள்” பல் மருத்துவர்கள் டாக்டர் டி.ஏ. விரஜா மற்றும் டாக்டர் டி.ஏ. வசுதா ஆகியோரின் ஹரி கதை நிகழ்ச்சி ’மாணிக்கவாசகர்’ பிட்டுக்கு மண் சுமந்த கதை என்ற தலைப்பில் நடைபெற்றது. திரு அரவிந்த் நாராயணன் வயலினும், திரு அர்ஜூன் அரவிந்த் மிருதங்கமும் வாசித்தனர்.

சங்கத்தின் துணைத் தலைவர் திரு செல்வராஜ் மகேந்திரன், பொதுச் செயலாளர் திருமதி சத்யா அசோகன், இணைச் செயலாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, இணைப் பொருளாளர் திரு பாலுச்சாமி, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி என். சாமுண்டீஸ்வரி, திருமதி ரேவதி ராஜன், ஆர். கணேஷ், திரு கே. சுந்தர் ஆகியோர் இசைக் கலைஞர்களையும், அத்திகிரி சகோதரிகளின் தாயார் திருமதி சரஸ்வதி ஆனந்தன் அவர்களையும் கௌரவித்தனர்.

 

செயற்குழு உறுப்பினர் திரு ஆ. வெங்கடேசன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.