தலைவர்கள் !

1.    அமரர் திரு எஸ்.சுப்பிரமணியன்    6.7.1947-19.9.1948   நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுப்பிரமணியன் சுவாமி அவர்களின் தந்தையார்
2.    அமரர் இராஜலட்சுமி ராகவன்    19.9.1948-1.6.1949    சங்கத்தின் சரித்திரத்தில் இடம்பெற்ற முதல் பெண் தலைவர் .
3.     அமரர் டாக்டர் கே .எஸ்.கிருஷ்ணன்    1)1.6.1949-24.6.1950 2)24.1950-8.6.1952 3)8.6.1952-19.7.1953 4)19.7.1953-19.2.1955 5)19.2.1955-11.3.1956 6)11.3.1956-31.3.1957 7)31.3.1957-5.1.1958 8)5.1.1958-5.7.1959 9)5.7.1959-1.6.196010)1.6.1960-29.1.196111)29.1.1961-28.1.1962       தேசிய  இயற்பியல் சோதனை  சாலையின்  இயக்குனராக இருந்தவர். சுமார் 12 ஆண்டுகளுக்குமேல்  தமிழ்ச்சங்கத் தலைவராக  சிறப்பான முறையில் வழிநடத்திச் சென்றவர்
4.    அமரர் கே .வி. வெங்கடாச்சலம்    1)28.1.1962-27.1.19632)27.1.1963-9.2.19643)9.2.1964-31.1.19654)31.1.1965-20.2.19665)20.2.1966-5.2.19676)5.2.1967-19.5.19687)19.5.1968-3.5.1970    நாம் அதனவரும் இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தில் அமர்ந்திருக்கிறோம்  என்றால் அதற்குக் காரணமாக இந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி கட்டியவர். எட்டு ஆண்டுகளுக்கு மேல் தலைவராக இருந்து சங்கத்திற்கு  என்று தனிக்கட்டிடம் உருவாக வழிவகுத்தவர். ஏழு முறை தொடர்ந்து  தலைவராக தேர்தெடுக்கப்பட்ட பெருமை உடையவர் .  கட்டிடத்திற்காக நிலம் ஒதுக்கியவுடன் அதனை வாங்க சுமார் ரூ.5000/- மகள் திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தை கொடுத்து உதவியவர். சங்கக் கட்டிடம் (முதல் கட்டடம்) கட்டிமுடிந்தவுடன் சாதனை  புரிந்த பெருமையுடன் தலைவர்  பொறுப்பிலிருந்து விலகி பெருமைக்குரியவர்
5.    திரு சி.வி.நரசிம்மன் IPS    1)25.4.1971-23.4.19782)23.4.1978-18.5.1980    ஒன்பது ஆண்டுகள் ததலவராக இருந்து சங்கத்தின் வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு பகாகொண்டாடிய பெருமைக்குரிய  சங்கத் தலைவர்.  வெள்ளி விழா மலர் உருவாக காரணமாக இருந்தவர். நூலகத்தத  நூலகத்தை  சீரமைத்து சிறப்பான முறையில்  இயங்க வழிவகுத்தவர்.
6.   திரு.ஜே .வீரராகவன்    18.5.1980-18.4.1982 சங்கத்திற்காக கலையரங்கம் உருவாக  அடிக்கல் நாட்டியவர். அதற்காக திரு.ஜேசுதாசின்  இசை கச்சேரியை நடத்திய பெருமைகுரியவர்
7. திரு எஸ்.ராமையா    1)18.4.1982-15.5.19832)15.5.1983-23.5.1986 சங்க கலையரங்கம்  உருவாவதற்கு பெரும்பாடுபட்டவர் .
8.    திரு எஸ்.ராமாமிர்தம்    23.5.1986-16.7.198916.7.1989-24.11.1991 ஒரு பொறியாளர் என்ற முறையில் கலையரங்கம் சிறப்பாக  அமைய வழிவகுத்தவர்
9.    திரு வி.ராஜாராமன்    1)24.11.1991-8.5.19942)8.5.1994-30.7.199530.7.1995-27.7.199727.7.1997-7.10.2001 நான்கு முறை தலைவராக தேர்தெடுக்கப்பட்ட சங்கநிதிநி நிலையை  கலையரங்கம்  உருவாக சீர்படுத்திய பெருமைக்குரியவர்
10.    அமரர் திரு.எம்.என்.கிருஷ்ணமணி 2001-2004 2006-2009, 2011-14 மூன்று முறை  தலைமை  பொறுப்பு ஏற்றவர்.. உச்சநீதி மன்ற வழக்கறிஞர்களின் சங்கத்தின் முன்னாள் தலைவர் . எழுத்தாளர், ஆன்மீகவாதி. இவர் முன்பு தலைவராக இருந்த போதுதான் திருவள்ளுவர் சிலை  தமிழ்ச் சங்கவளாகத்தில் வைக்கப்பட்டது
11.     திரு. ஜி.பாலச்சந்திரன், ஐ.ஏ.எஸ்.    2004-2005 தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர் . நல்ல பேச்சாளர். சிறந்த நிர்வாகி. அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவி வகித்தவர்.
12 திரு .ஜி.எஸ்.சௌந்தர்ராஜன்    2005-2006    சிறந்த நிர்வாகி.
13. திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி   19.5.1968-3.5.197024.11.1991-8.5.19948.5.1994-30.7.199530.7.1995-27.7.19972004-2006   இணை செயலராக 19 ஆண்டுகள்,  செயலராக பத்தாண்டுகள், துணை தலைவராக 2 ஆண்டுகள்,  தலைவராக 2 ஆண்டுகள் பொறுப்பு வகித்த திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி சாதாரண உறுப்பினராக சேர்ந்து தலைவர்  பதவிக்கு  உயர்ந்த தொண்டர் . தமிழ்ச்சங்கம் கிருஷ்ணமூர்த்தி என்றும் சங்கத்தாத்தா என்றும் அன்புடன்  அழைக்கபடுபவர்
14 திரு .வி. பாலசுப்பிரமணியன் 2014 முதல் 2016 வரை   ரிலையன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தலைவரான இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லிவாசி ‘சவுத் இண்டியன்’ தேட்டர்ஸ் நாடக குழுவை நிறுவியவர்களில் ஒருவர்.மேடை  நாடகங்களில் நடித்த  அனுபவம் உண்டு. பல்வேறு  கலை  மற்றும் ஆன்மீக அமைப்புகளுடன் தொடர்புள்ள இவர் அருள்மிகு சுவாமிநாத ஸ்வாமி (மலை  மந்திர்) மற்றும் ஸ்ரீ தேவி  காமாட்சி அம்மன் கோவில்களின் அறங்காவலர்களில் ஒருவர். நாட்டின் மிகப் பெரிய தொழில் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் நீண்ட காலம் பணியாற்றி  வருபவர்
15 திருமதி இந்துபாலா 2016-2019 எம்.ஏ.(ஆங்கிலம்), எம்.ஏ.(இந்தி), எம்.ஏ.(சமூகவியல்),எம்.எட்.பட்டங்கள் பெற்று, தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் 40 ஆண்டு காலம் ஆசிரியராகவும், முதல்வராகவும் பொறுப்புகள் வகித்தவர். கல்விப் பணிக்காக விருதுகள்ப பல பெற்றவர். NCERT, SCERT, CBSE ஆகிய அமைப்புகளுடன்  இணைந்து கல்விப்பணி ஆற்றி வருபவர். DIET அமைப்பின்  மூலம் ஆசிரியர்களுக்குபயிற்சி அளிப்பவர்.  தன்னுடைய முன்னாள் மாணவர்களின் மூலம், தமிழ்க் கல்விக் கழகத்துக்கு பெருமளவில் நிதி திரட்டி தமிழ்ப்பள்ளிகளின் கட்டமைப்பை பொலிவுபடுத்தியவர்.  தில்லித் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றில் இரண்டாம் முறையாக ஒரு பெண்மணி தலைவர்  பொறுப்பில் உள்ளார்.
16 திரு .வீ. ரங்கநாதன் ஐ.பி.எஸ் (பணி நிறைவு) 2020-22 ஐ.பி.எஸ் அதிகாரியாக கடந்த 1982 டெல்லி காவல் துணை ஆணையராக  பதவி ஏற்றார்.  கடந்த 30 ஆண்டுகளாக டெல்லி  காவல் துறையில் பல்வேறு முக்கியமானபதவிகளை அலங்கரித்தவர். டெல்லி மட்டுமின்றி அந்தமான், நிக்கோபார்  தீவுகள், கோவா  போன்ற  இடங்களில் காவல் உயர் அதிகாரியாக திறம்பட பணியாற்றியவர். சிறந்த சேவைக்கான  குடியரசுத் ததலவரின் போலீஸ் விருது இவரை  அலங்கரித்துள்ளது. 34 ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்து உதழத்துடெல்லி காவல் பணி  இருந்து ஓய்வு பெற்று தற்போது வழக்குரைஞராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதிவு பெற்றுள்ளார். சங்கத்துடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய  தொடர்பு கொண்ண்டவர். சங்கத்தின் மேம்பாட்டில் பெரும் அக்கறை  கொண்டவர் சங்கத்துக்கும் தலைநகர்   தமிழர்களுக்கும் கதவை  தட்டிய போதுதல்லாம் தயங்காது பல்வேறு உதவிகளை புரிந்த பெருமனதுடையவர்.
17 திரு. சக்தி பெருமாள் தற்போதைய தலைவர் தலை நகர் தமிழர்களால் சக்தி பெருமாள் என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் ஏற்கனவே தமிழ்ச் சங்கத்தின் செயலராக நேர்மையுடனும் திறமையுடனும் பணியாற்றி உறுப்பினர் மனதில் இடம்பிடித்தவர். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் தலைமையில் தமிழ் 2010 என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்குக்கு பல சான்றோர்களை அழைத்து வந்து அது தொடர்பாக ஒரு புத்தகத்தை வெளியிட்டுத் தமிழ்ச் சங்கத்துக்குப் பெருமை சேர்த்தவர். ஒரு தனித்துவம் கொண்ட அணுகுமுறையால், தலை நகரத் தமிழர்களிடையே தமக்கென ஒரு இடம் பெற்றவர். செயல்துடிப்பு மிக்க உழைப்பாளி. சக்தி குழுமத்தின் பொது மேலாளர்.