கோமல் தியேட்டர் நாடக குழுவினரின் கோமல் சுவாமிநாதனின் கிளாசிக் நாடகங்கள் தாரிணி கோமல் இயக்கத்தில் 26.03.2022 சனிக்கிழமை அன்று ’தண்ணீர் தண்ணீர்’ 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ‘என் வீடு, என் கணவன், என் குழந்தை’ ஆகிய இரு நாடகங்கள் நடைபெற்றன. சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைச் செயலாளர்கள் திருமதி ஜோதி பெருமாள், திரு ஆ. வெங்கடேசன், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஜோதி இராமநாதன், மூத்த பத்திரிகையாளர் யதார்த்தா கி. பென்னேஸ்வரன் ஆகியோர் நாடக கலைஞர்களை கெளரவித்தார்கள். திரு கமலாஹர் I.F.S, திருமதி டி. உமா I.F.S, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.