நகைச்சுவைப் பட்டிமன்றம் – 20.11.2021

20.11.2021 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பட்டிமன்ற நடுவர் திருமதி ஜோதிகா ராஜன் அவர்கள் தலைமையில் நகைச்சுவைப் பட்டிமன்றம் திரை இசைப்பாடல்கள் சமுதாயத்திற்குமணிமகுடமா? முள்கிரீடமா? என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில், மணிமகுடமே என்ற அணியில் திரு இடிமுரசு துரைப்பாண்டியன் மற்றும் சொல்லரசி அகிலாவும், முள்கிரீடமே என்ற அணியில் நகைச்சுவைத் தென்றல் திரு திருநாவுக்கரசு மற்றும் இன்சொல்லரசி அன்பு கார்த்தியாயினி அவர்களும் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்வில் தில்லித் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் திரு குருமூர்த்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் ஹயக்ரீவா அமைப்பின் நிறுவனர் திரு குருச்சரண் அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார். சங்க இணைப்பொருளாளர் திரு இரா.இராஜ்குமார் பாலா தொகுப்புரை ஆற்றினார். சங்க இணைச்செயலாளர் திரு ஆ.வெங்கடேசன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் சங்க இணைச்செயலாளர் திருமதி ஜோதி பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் திரு கே.எஸ்.முரளி, திரு எஸ். சுவாமிநாதன், திரு பி.ஆர். தேவநாதன் மற்றும் காத்திருப்பு உறுப்பினர் சங்கர் ஆகியோர் பேச்சாளர்களை கௌரவித்தனர்.

திரை இசைப்பாடல்கள், சமுதாயத்திற்கு மணிமகுடமே என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார்.