மலரஞ்சலி – மகாகவி பாரதியார் பிறந்த நாள் – 11.12.2020

தில்லித் தமிழ்ச் சங்கம் சார்பாக இன்று 11.12.2020 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் பாரதியின் 139 வது பிறந்த நாளன்று ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு என். கண்ணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்தியத்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு ஜி.கே.வாசன் அவர்கள் மற்றும் மகளிரணி தேசியத் தலைவர்,பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திருமதி வானதி சீனிவாசன், அவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஜி.கே.வாசன் அவர்கள் 139வது பிறந்த நாளான மகாகவி சுப்ரமண்ய பாரதியாரின் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்.
100 ஆண்டுகளுக்கு முன்பே உணவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாடியவர்.தில்லியிலே அவரது பிறந்த நாளை சிறப்புடன் தமிழ்ச்சங்கம் கொண்டாடுவது போற்றத்தக்கது என்றார். அவ்வாறே இங்கு வந்திருக்கும் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் எளிமையின் இலக்கணமாகத் திகழ்பவர்.படிப்படியாக உயர்ந்தவர்.சிறந்த பேச்சாளர்.மகளிரணி தேசியத் தலைவர்,நல்ல தலைமைக்குப் பொருத்தமானவர். அவருக்கு எனது வணக்கங்கள்.தில்லியிலே தமிழர்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்கென பாடுபடுபவர். அகில இந்திய தமிழ்ச்சங்கப்பேரவையின் செயலாளர் திரு ஆர்.முகுந்தன் அவர்களுக்கும் மற்றும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் தில்லித் தமிழ்ச் சங்க செயலாளர் திரு. என். கண்ணன் அவர்களுக்கும் எனது நன்றிகள் என்றார்.

திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் தனது உரையில் மகாகவி சுப்ரமண்ய பாரதி தமிழரின் மிகச் சிறந்த அடையாளமாகத் திகழ்பவர்.இவ்விழாவிற்கு தில்லித் தமிழ்ச் சங்கம் சார்பாக கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.இன்று மிகப்பெரிய தேசியக் கட்சியின் மகளிரணித் தலைவராக பொறுப்பு ஏற்றமைக்கு மகாகவி சுப்ரமண்ய பாரதியாரும் காரணமாவார். சிறு வயது முதலே அவரின் கவிதைகள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.இன்று பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக உயரந்த நிலைக்கு வரக் காரணம் அவருடைய எழுத்துக்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்கள் எனலாம். மகாகவி பாரதியின் ஆசீர்வாதத்தோடு நான் எனது பணியைத் தொடர்கிறேன். இன்று இவ்விழாவிற்கு வருகை தந்துள்ள திரு ஜி.கே.வாசன் அவர்கள் முன்னாள் மத்தியத்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் என பல்வேறு நிலையில் இருந்தவர்.
மிகச்சிறந்த மனிதர்.தூய்மையான அரசியலுக்கு அடையாளமாகத் திகழ்பவர்.தில்லித் தமிழ்ச் சங்கம் இவ்விழாவில் அழைத்தமைக்கும், சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ள நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொளகிறேன் என்றார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் திரு.அண்ணாாமலை அவர்கள் தனது உரையில் பாரதியின் பிறந்த நாளை திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடன் இணைந்து கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி.பாரதி அவர்கள் பல்வேறு முகங்களைக் கொண்டவர்.எழுத்தால் மக்களிடையை புரட்சிகளை ஏற்படுத்தியவர்.பகுத்தறிவாதி.14 வயதிலேயே எட்டையபுர மன்னரால் மகாகவி என்று பட்டம் சூட்டப் பெற்றவர் என்றார். அத்துடன்
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக திருமதி வானதி சீனிவாசன் திகழ்வதாகக் கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சரான திரு ஜி.கே.வாசன் அவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை.அனைவரிடமும் இனிமையாகப் பழகுபவர்.அவரது வெண்மை உடைபோல் உள்ளமும் தூய்மை கொண்டவர்.இவ்விழாவை ஏற்பாடு செய்திருக்கும் தி்ல்லித்தமிழ்ச்சங்கத்திற்கு நன்றிகள் என தனது உரையை முடித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியின் இறுதியாக அகில இந்திய தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர், திரு ஆர்.முகுந்தன் அவர்கள் தனது உரையில் திரு ஜி.கே.வாசன் அவர்கள் அனைவரிடத்திலும் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர். எங்கள் ஊரான தஞ்சை மாவட்டத்துக்குச் சொந்தக்காரர்.139 வது பாரதி பிறந்த நாள் தில்லித்தமிழ்ச் சங்கத்துடன் கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி.இவ்விழாவிற்கு வருகை புரிந்துள்ள திருமதி வானதி சீனிவாசன் அவர்களும் எல்லோராலும் மதிக்கப்படுபவர்.சிறந்த பேச்சாளர்.திரு அண்ணாமலை அவர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்.சிறந்த பேச்சாளர்.நமது தமிழ்ச்சங்கத்தில் திரு அண்ணாமலை அவர்கள் வந்து உரையாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

இவ்விழாவில் தில்லித் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு வி.ரெங்கநாதன்,துணைத்தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைச்செயலாளர் திருமதி ஜோதி பெருமாள்,செயற்குழு உறுப்பினர் திரு.வெங்கடேசன்,குர்காவூன் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு சக்தி பெருமாள், முன்னாள் செயற்குழு உறுப்பினர் திரு ராமமூர்த்தி, திரு முத்துசாமி, திரு அருணாச்சலம் மற்றும் சகூர்பூர் முன்னாள் கவுன்சிலர் திரு ராஜா அவர்களும்அவர்கள் கலந்து கொண்டனர்.