02.10.2021 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் மதுக்கர் ரெயின்போ மருத்துவமனையுடன் தில்லித் தமிழ்ச் சங்கம் இணைந்து திரு பெ. ராகவன் நாயுடு அவர்கள் நிறுவிய அமரர் டாக்டர் ஆர். ராஜராஜன் நினைவு அறக்கட்டளையின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சிறப்பு விருந்தினராக இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் இயக்குநர் டாக்டர் ப்ரியங்கா மிஸ்ரா, ஐ.பி.எஸ் அவர்கள் கலந்து கொண்டார். மகளிர் மருத்துவ நிபுனர் டாக்டர் சி.எஸ். மைத்ரேயி அவர்களும், குழந்தைகள் மருத்துவ நிபுனர் டாகட்ர கெளசிக் ராய் அவர்களும் முகாமில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கினார்கள். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன், பொருளாளர் திரு எம்.ஆர். பிராகஷ், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி தேன்மொழி முத்துக்குமார், திரு பி.ஆர். தேவநாதன், திரு ஆர். கணேஷ், திரு ப. பரமசிவம், திரு ஏ.வி. முனியப்பன் ஆகியோர் இம்முகாமினை துவக்கி வைத்தனர். அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மேலும் மகாத்மா காந்தியின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.