கருத்தரங்கம் – பாராட்டு விழா – 26-02-2020

26.02.2020 புதன்கிழமை அன்று 2019 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருதாளர் மூத்த எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களின் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சோ. தர்மனின் படைப்பும் வாழ்வும் என்ற தலைப்பில் கவிஞர், ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்பிரமணியன், சோ. தர்மனின் புடைப்புலகம் என்ற தலைப்பில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் முனைவர் நா. சந்திரசேகரன், சாகித்ய அகாதமி விருது பெற்ற சூல் புதினம் பற்றிய பார்வை என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் யதார்த்தா கி. பென்னேஸ்வரன் ஆகியோர் பேசினார்கள். கருத்தரங்கைத் தொடர்ந்து சோ. தர்மன் அவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சாகித்ய அகாதமி தமிழ் ஒருங்கிணைப்பாளர் கவிஞர், பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆ. வெங்கடேசன், திரு பி. பரமசிவம் ஆகியோர் பேச்சாளர்களை சிறப்பித்தனர்.