பல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 28.11.2021

28.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டி.வி, விஜய் டி.வி புகழ் திரு மிமிக்ரி பாஸ்கர், விஜய் டி.வி கலக்கப்போவது யாரு புகழ் திரு பழநி, விஜய் டி.வி, ஜி தமிழ் டி.வி புகழ் திரு விஜய் மற்றும் சன் டி.வி. புகழ் திருமதி கெளரி ஜானு ஆகியோர் வழங்கிய பல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் வரவேற்புரையுடன் நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தின் இணை உள்ளுறை ஆணையர் திரு ந.எ. சின்னதுரை அவர்களும், சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு இரா. இராகேஷ் நன்றியுரை கூறினார்.

சங்கத்தின் இணைச் செயலாளர்கள் திருமதி ஜோதி பெருமாள், திரு ஆ. வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆர். கணேஷ், திரு எஸ். சுவாமிநாதன், திரு ஏ.வி. முனியப்பன் மற்றும் திரு பி. பரமசிவம் ஆகியோர் கலைஞர்களை கெளரவித்தனர்.