மலரஞ்சலி – மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவு நாள் – 25.12.2020

தில்லித் தமிழ்ச் சங்கம் சார்பாக மூதறிஞர் ராஜாஜி  (இராஜகோபாலாச்சாரி) அவர்களின்   நினைவு நாளை முன்னிட்டு  25.12.2020  வெள்ளிக்கிழமை அன்று காலை  10 மணிக்கு    ராஜாஜி சாலையில்  அமைந்துள்ள   அவரது திருவுருவச் சிலைக்கு  மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின்  துணைத் தலைவர் பி.குருமூர்த்தி,
பொதுச்செயலாளர்  என். கணணன், இணைச் செயலாளர் ஜி.என்.டி. இளங்கோவன்   இணைப் பொருளாளர்     இரா. இராஜ்குமார் பாலா,   செயற்குழு உறுப்பினர்கள்      ஆ. வெங்கடேசன் ,    கே.எஸ். முரளி, அனைத்திந்திய தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் இரா.முகுந்தன் மற்றும் தென்னிந்திய முன்னேற்றக் கழகத் தலைவர்  மாரியப்பன் மற்றும்  தென்னிந்திய முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் தங்கவேலு  ஆகியோர் கலந்து கொண்டனர்.