பொங்கல் விழா – சிறப்புப் பட்டிமன்றம் – 26.01.2025

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு 3 நாட்கள் நிகழ்ச்சியில் மூன்றாவது நாளான 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தொலைக்காட்சிப் புகழ் ஈரோடு திரு மகேஷ் தலைமையில் வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பது குடும்பமா? பொருளாதாரமா? என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் தொலைக்காட்சிப் புகழ் பேச்சாளர்கள் திரு நாகமுத்து பாண்டியன், செல்வி கபிலா விசாலாட்சி ஆகியோர் குடும்பமே என்ற தலைப்பிலும், வழக்கறிஞர் திரு அருண் மற்றும் செல்வி ஹேமவர்த்தினி ஆகியோர் பொருளாதாரமே என்ற தலைப்பிலும் பேசினார்கள்.

வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு பொருளாதாரம் தேவை என்றாலும் அதிகம் துணை நிற்பது குடும்ப உறவுகளே என்று நடுவர் தீர்ப்பளித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு சமூக சேவகர் திரு கரு. நாகராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடுவரை கெளரவித்து வாழ்த்துரை வழங்கினார்.

சங்கத்தின் துணைத் தலைவர் திரு பெ. இராகவன் நாயுடு, பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி, பொருளாளர் திரு எஸ். அருணாசலம், இணைப் பொருளாளர் திரு வி.என்.டி. மணவாளன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி அமுதா பாலமூர்த்தி, திரு ஜெ. சுந்தரேசன், திரு சி. கோவிந்தராஜன், திரு பி. ரங்கநாதன், திரு சி. தங்கவேல் மற்றும் காத்திருப்பு உறுப்பினர் திருமதி ரேவதி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.