30.03.2025 ஞாயிற்ற்றுகிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மிஷன் இணைந்து நடத்திய யுகாதி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குரு திருமதி சீதா நாகஜோதி, குரு திரு நாகஜோதி ஆகியோரின் பவுண்டேஷன் ஃபார் டெவலப்டு இந்தியா, அபிநயபிரணீதா கூச்சிப்பூடி ஆர்ட் சொசைட்டி மாணவியர்களின் ”கூச்சிப்பூடி வைபவம்” நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ வெங்கடேஸ்வர மிஷனின் நிறுவனர் திரு பெ. இராகவன் நாயுடு வரவேற்புரை ஆற்றினார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்கள் தலைமை வகித்தார்.
இந்திய வான்படையின் குரூப் கேப்டன் தெய்வராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தில்லி கம்பன் கழகத்தின் தலைவர் திரு கே.வி.கே. பெருமாள் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி உஷா வெங்கடேசன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் திரு எஸ். அருணாசலம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மிஷன் நிறுவனர் திரு பெ. இராகவன் நாயுடு, திருமதி உஷா இராகவன், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், சென்னை ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் திரு பழனிவேல் ஆகியோர் கலைஞர்களை கௌரவித்தார்கள். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி, இணைப் பொருளாளர் திரு வி.என்.டி. மணவாளன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி அமுதா பாலமூர்த்தி, திரு பி. கோவிந்தராஜன், திரு ஜெ. சுந்தரேசன், திரு பி. ரங்கநாதன், திரு பி. அமிர்தலிங்கம், காத்திருப்பு உறுப்பினர்கள் திருமதி ரேவதி ராஜன், திரு எம். ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.