தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சர்வதேச மகளிர் தின விழா இரண்டு நாள் கொண்டாட்டங்களின் முதல் நாள் (08.03.2025) நிகழ்ச்சியில் மகளிருக்கான போட்டிகள் மாலை 3.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்யாணமாலை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி மீரா நாகராஜன் அவர்கள் தலைமை வகித்தார்.
சங்கத்தின் இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து திருமதி கீதா சந்திரன் அவர்களின் கலைச் சேவைக்காகவும், திருமதி சுதா ரகுராமன் அவர்களின் இசை சேவைக்காகவும், திருமதி லட்சுமி ரகுபதி அவர்களின் சமூகச் சேவைக்காகவும், டாக்டர் சுஜாதா அவர்களின் மருத்துவச் சேவைக்காகவும், திருமதி பிரியா ரெங்கநாதன் அவர்களின் கலைச் சேவைக்காகவும், திருமதி ராஜேஸ்வரி அவர்களின் சமூகச் சேவைக்காகவும், திருமதி ராஜ்யஸ்ரீ நாராயண் அவர்களின் சமூகச் சேவைக்காகவும், திருமதி சித்ரா மூர்த்தி அவர்களின் ஆன்மீகச் சேவைக்காகவும் ”சாதனைப் பெண்மணிகள்” விருது வழங்கப்பட்டது.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி மாலதி தமிழ்ச்செல்வன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி அமுதா பாலமூர்த்தி அவர்கள் நன்றியுரை கூறினார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள், பொதுச்செயலாளர் திரு இரா. முகுந்தன் ஆகியோர் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து, விருது பெற்ற சாதனைப் பெண்மணிகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
சங்கத்தின் துணைத் தலைவர் திரு பெ. இராகவன் நாயுடு, பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி உஷா வெங்கடேசன், திரு தி. பெரியசாமி, திரு ஜெ. சுந்தரேசன், திரு சி. கோவிந்தராஜன், திரு பி. ரங்கநாதன், திரு என். ராஜ்மோகன் மற்றும் காத்திருப்பு உறுப்பினர் திருமதி ரேவதி ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.