பாராட்டு விழா – திருமதி கே.வி. ஜெயஸ்ரீ – 14.03.2021

14.03.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலுக்காக சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற திருமதி கே.வி. ஜெயஸ்ரீ அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு ஆ. வெங்கடேசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

சங்கத்தின் தலைவர் திரு வி. ரெங்கநாதன், ஐ.பி.எஸ் (ஓய்வு) அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்களின் வாழ்த்துரையில் இதுநாள் வரை தமிழ் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் யாரெல்லாம் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார்களோ அவர்களை உடனே அழைத்து தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது திரு இராஜாமணி அவர்களின் வேண்டுகோளாக இருந்தது, அதன்படி இன்று வரை ஒவ்வொரு விருதாளரையும் அழைத்து பாராட்டு விழா நடத்தப்படுகிறது. திருமதி கே.வி. ஜெயஸ்ரீ அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் திரு யதார்த்தா கி. பென்னேஸ்வரன் அவர்களின் வாழ்த்துரையில் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது வட்டார வழக்கு எனப்படும் மொழியாகும். அதோடு மட்டுமல்லாது ஒரு மொழிபெயர்ப்பாளர் சிறிதும் மாற்றம் இல்லாமல் படைப்பாளரின் படைப்பை மிகத் துல்லியமாக கையாளவேண்டும். திருமதி கே.வி. ஜெயஸ்ரீ அவர்களின் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இவரது மொழி பெயர்ப்பில் திரு க.நா.சு அவர்களின் ஆலோசனையை பின்பற்றுகிறார் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இவர் பல ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு பணியை செய்து வருகிறார். இவரது படைப்புகளை செடியாக ஊன்றி மரமாக வளர்க்கிறார். அவரது மகுடத்தை மேன்மேலும் விருதுகளால் அலங்கரிக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற திருமதி கே.வி. ஜெயஸ்ரீ அவர்கள் தனது ஏற்புரையில் நான் சிறுவயதிலிருந்தே எனது தாயாரிடமிருந்து மலையாள மொழியைக் கற்றுக் கொண்டேன். திரு யதார்த்தா பென்னேஸ்வரன் அவர்கள் கூறியது போல மொழி பெயர்ப்பு என்பது மிகவும் சிக்கலான விஷயம். ஏனெனில் மொழிபெயர்ப்பாளருக்கு எழுத்தாளரின் படைப்பை மற்றொரு மொழியில் மொழி பெயர்க்கும் பொழுது வட்டார வழக்கு எனப்படும் மொழியை நன்கு அறிந்திருக்க வேண்டும். நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற மொழிபெயர்ப்பு நாவலின் மலையாள எழுத்தாளரான திரு மனோஜ் குரூர் அவருக்கு தமிழ் மொழியில் மொழிபெயர்த்தது மிக்க மகிழ்ச்சி என கூறினார். நான் ஒவ்வொரு முறை நாவலை மொழிபெயர்க்கும் போது எட்டு முறை, 10 முறை என படித்து பார்ப்பேன். க.நா.சு அவர்களின் கருத்தை நினைவு கூர்ந்து கொள்வேன். சாகித்ய அகாடமி விருது பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. எனது மாணவர்களுக்கு பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்களை பரிசாக அளிப்பதாக கூறினார். இன்று என்னை அழைத்து பாராட்டு விழா நடத்திய தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

சங்கத்தின் இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆர். கணேஷ், திரு பி. பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.