05.08.2023 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் வித்வான் திரு வினோத் குமார் கன்னுர் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வித்வான் திரு அரவிந்த் நாராயணன் வயலினும், தாளமணி வித்வான் திரு பி. வெற்றிபூபதி மிருதங்கமும், திரு எம். ஸ்ரீராம் கடமும், திரு உஜித் உதய் தபேலாவும் வாசித்தார்கள்.
மத்திய தகவல் தொடர்பு அமைப்பின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் கே.சதீஷ் நம்பூதிரிபாட் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள், பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், பொருளாளர் திரு எஸ். அருணாசலம் ஆகியோர் கலைஞர்களை கெளரவித்தனர்.