மலர் அஞ்சலி – 03-04-2021

02.04.2021 வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு  விருதாளரும் சிறந்த தமிழ்- ‌இந்தி மொழியியல் அறிஞருமான டாக்டர் எச். பாலசுப்ரமணியன் காலமானார்.
03.04.2021 சனிக்கிழமை அன்று டாக்டர் எச். பாலசுப்ரமணியின் அவர்களுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, இணைச் செயலாளர் திரு ஜி.என்.டி. இளங்கோவன், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு ஆ. வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி அவர்கள் தனது இரங்கல் செய்தியில், டாக்டர் எச். பாலசுப்ரமணியின் அவர்கள் பாரதியார் கவிதைகளை ஹிந்தியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அந்த படைப்பை வெளியிடுவதற்கு தில்லித் தமிழ்ச் சங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களின் இரங்கல் குறிப்பில், மொழியாக்க அனுபவம்  வாய்ந்த எச். பாலசுப்பிரமணியம் அவர்கள் தொல்காப்பியம் முழுமையையும் தன்னுடன் இணைந்து செம்மொழி நிறுவனத்திற்காக இந்தியில் மிகச்சிறப்பாக  மொழியாக்கம் செய்ததை நினைவுக் கூர்ந்தார்.