12.03.2022 சனிக்கிழமை சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு பாராட்டு விழா தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், இ.கா.ப (ஓய்வு) அவர்கள் தலைமை வகித்தார். எழுத்தாளர் திரு பி.ஏ. கிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் திரு மாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஏற்புரையில் எழுத்தாளர் அம்பை அவர்கள் – எல்லா பெண்களுமே சாதனையாளர்கள்தான். வானூர்தி, பேருந்து ஓட்டும் பெண்கள் பெரும் சாதனையாளர்கள். நான் என்னுடைய எழுத்துக்காக விருது பெறுவதை விட, சாதாரணமனவர்கள் குறிப்பாக பெண்களை என்னை அணைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவதை மிகப் பெரிய விருதாக கருதுகிறேன். இந்த சாகித்ய அகாதமி விருதை எனது தாயார் அலமேலு அம்மா அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். பெண் எழுத்தாளர் என்று அறியப்படுவதை விட எழுத்தாளர் என்று தம்மை கூறுவதையே தாம் விரும்புவதாக கூறினார்.
வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் அவர்கள் அம்பையின் படைப்புகளை அலசி பேசினார். விருது பெற்ற சிறுகதைச் தொகுப்பு குறித்து விரிவாக பேசினார். சிறந்த படைப்பாளிகளில் என்றென்றும் நினைவு கூறப்படுபவராக அம்பை திகழ்வார் என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கெண்ட எழுத்தாளர் மாலன் அவர்கள் அம்பையின் தனிப்பட்ட பண்புகளையும், தமது 50 ஆண்டுகால நட்பு குறித்தும் பேசினார். அவர் தனி ஒருவராக பெண்கள் நிலை குறித்து ஆய்வு நடத்தி வருகிறார் என்றார்.
துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி அவர்கள் நன்றி கூறினார். சங்கத்தின் இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், தினமலர் கூடுதல் இயக்குனர் திரு ஆர். சீனிவாசன், குர்கான் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு சக்தி பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி தேன்மொழி முத்துக்குமார், திரு ப. பரமசிவம், திரு கே.எஸ். முரளி, திரு எஸ். சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.