பரத நாட்டியம்.

06.08.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் லாஸ்ய நிருத்யாலயம் நடனப் பள்ளியின் குரு துஷாரா மற்றும் மாணவிகளின் “ஆண்டாளின் அரங்கன்” பரதநாட்டியம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள் அவர்கள் ஆண்டாளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள். இதைப் பார்ப்பதற்கு ரசிகர்களாகிய நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று கூறினார்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி செடியின் அடியில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டாளாக அவதாரம் செய்தார். இன்று ஆடி மாதத்தில் நம் முன்னே குரு துஷாரா அவர்கள் ஆண்டாளாக அவதாரம் செய்திருக்கிறார் என்று கூறினார்.

பேராசிரியர் முனைவர் ஏ.எஸ். ஆராவமுதாச்சாரியார் அவர்கள் நிகழ்ச்சி பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது என்றார்.

சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள், பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், பொருளாளர் திரு எஸ். அருணாசலம், இணைப் பொருளாளர் திரு வி.என்.டி. மணவாளன், செயற்குழு உறுப்பினர் திரு பி. அமிர்தலிங்கம், சங்கத்தின் கூச்சிப்பூடி பயிலரங்க குரு திருமதி சீதா நாகஜோதி மற்றும் புதுதில்லி எஸ்.எல்.பி.எஸ். பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஏ.எஸ். ஆராவமுதாச்சாரியார் ஆகியோர் நாட்டியக் கலைஞர்களை சிறப்பித்து சான்றிதழ்களை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி உஷா வெங்கட் அவர்கள் தொகுத்து வழங்கினார்.