தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 02.10.2020 வெள்ளிக்கிழமை அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி எனும் மாமனிதர் என்ற தலைப்பில் புதுதில்லி தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குனர் திரு அ. அண்ணாமலை அவர்கள் சிறப்புரையாற்றினர். சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், ஐ.பி.எஸ் (ஓய்வு) அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். தில்லிப் பல்கலைக் கழகத்தின் சமுக அறிவியல் துறையின் முன்னாள் துறைத் தலைவர் மற்றும் இசையியல் அறிஞர் பேராசிரியர் டி.கே. வெங்கடசுப்ரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து டாக்டர் ஸ்ரீதர் வாசுதேவனின் இசையமுதம் நடைபெற்றது. ஜி. ராகவேந்திர பிரசாத் வயலினும், மனோகர் பாலசந்திரனீ மிருதங்கும் பக்கவாத்தியங்களாக வாசித்தார்கள். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு பி.ஆர். தேவநாதன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியை சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி அவர்கள் தொகுத்து வழங்கினார். சங்கத்தின் இணைச் செயலாளர் திருமதி ஜோதி பெருமாள் அவர்கள் காந்தியை பற்றிய கவிதையை தொகுத்து வழங்கினார். செயற்குழு உறுப்பினர் திருமதி ஜோதி ராமநாதன் அவர்கள் நன்றியுரை கூறினார்.