73-வது குடியரசு தின விழா – 26.01.2022.

26.01.2022 புதன்கிழமை அன்று 73-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சங்க வளாகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இணைச்செயலாளர் திரு ஆ.வெங்கடேசன் கொடியேற்றினார். நிகழ்வில் இணைச்யெலாளர் திரு ஜோதி பெருமாள்,இணைப்பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு ப .பரமசிவம், திருமதி ஜோதி இராமநாதன், திருமதி ஜோதி பெருமாள் மற்றும் மத்திய உள்துறையின் துணை இயக்குனர் திரு வி. முத்துக்குமார், தில்லி பா.ஜ.க. நிர்வாகி திரு வெள்ளைக்கண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.