கொடியேற்று விழா – 15.08.2021

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ரிலையன்ஸ் குழு தலைவருமான திரு வி. பாலசுப்பிரமணியன் அவர்களும், அவரது துணைவியார் திருமதி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து கோலாட்டம் கவிதை வாசிப்பு மற்றும் பாடல் கலந்த பல்சுவை நிகழ்ச்சிகள் தேசப் பக்தி மணம் கமழ நடந்தன. தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயலர் திரு என். கண்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்க நிகழ்ச்சியை இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் தொகுத்து வழங்கினார். இணைச் செயலர் திருமதி ஜோதி பெருமாள் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
வாழ்த்திப் பேசிய திரு வி. பாலசுப்பிரமணியன் அவர்கள் பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்கள் தலைமையில் இந்திய மிகப் பெரிய வல்லரசாக உருவாகியிருப்பதாக பெருமையுடன் குறிப்பிட்டார். 75 ஆண்டுகளை கடந்த தில்லித் தமிழ்ச் சங்கமும் மேன்மேலும் வளர வேண்டும் என்று மனதார வாழ்த்தினார். ஐ.ஒ.பி தொழிற்சங்கத்தின் தலைவர் திரு இரா. முகுந்தன் அவர்களும், ஹயக்ரீவா அனைப்பின் பொதுச் செயலர் திரு குருச்சரண் அவர்களும், ரசிகப்பிரியா கலாச்சார அமைப்பின் பொதுச் செயலர் திரு ஆர். ராமநாதன் அவர்களும், ஐ.டி.பி.பி ஆய்வாளர் திருமதி ஜி. சித்ரா அவர்களும், கூச்சிப்புடி குரு திரு நாகஜோதி அவர்களும் வாழ்த்திப் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் திரு இரா. இராஜ்குமார் பாலா, திருமதி ஜோதி பெருமாள், திருமதி மீனா வெங்கி ஆகியோர் கவிதை வாசித்தனர். திருமதி ராதா சங்கர், திருமதி விஜி சந்திரசேகர், செல்வி ஆர்த்தி ஐயங்கார் ஆகியோர் தேசப் பக்திப் பாடல்களை பாடினார்கள்.
கோலாட்டம் திருமதி ருக்மணி மகாலிங்கம் அவர்களின் தலைமையில் திருமதி சுபத்ரா ரமேஷ், திருமதி அனுஷா கண்ணன், செல்வி ஹரிணி மகாலிங்கம், திருமதி மீனா பிரகாஷ், திருமதி ஸ்ரீவித்யா பிரகாஷ் ஆகியோர் கூட்டாக வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி, பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஜோதி ராமநாதன், திரு ஆ. வெங்கடேசன், திரு ஆர். கணேஷ், திரு பி. பரமசிவம், திரு ஆர். ராகேஷ், திரு ஏ.வி. மணி, திரு எஸ். சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.