10.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லி முத்தமிழ்ப் பேரவையுடன் தில்லித் தமிழ்ச் சங்கம் இணைந்து திருமதி ஜெயந்தி ஸ்ரீதரன் அவர்களின் நாலாயிர திவ்ய பிரபந்தம் (இரண்டாம் ஆயிரம்) இசை குறுந்தகடு வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், இ.கா.ப, (ஓய்வு), பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், ஸ்ரீ வெங்கடேஸ்வர மந்திர் ஆர்.கே. புரம் துணைத் தலைவர் திரு பி.ஆர். தேவநாதன், கர்நாடக சங்கீத சபாவின் பொதுச் செயலாளர் திரு ஆர். மகாதேவன், டாடா குழுமத்தின் திரு ஸ்ரீராமன், தொழிலதிபர் திரு லட்சுமி நாராயணன் மற்றும் ‘டிவி’ வரதராஜன், ஆகியோர் இசை குறுந்தகட்டை பெற்றுக் கொண்டார்கள்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு என். கண்ணன் அவர்கள் வரவேற்புரையில்
ஸ்ரீமதி ஜெயந்தி ஸ்ரீதரன் அவர்கள் பாரம்பரிய கர்நாடக இசை குடும்பத்தை சேர்ந்தவர்.
டாக்டர் எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் முதன்மை சீடர்களுள் ஒருவர் .
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தனது குரு எம்.எல்.வி.யுடன் சேர்ந்து, சொந்தமாக இசை நிகழ்ச்சிகளை நடத்திய ஸ்ரீமதி ஜெயந்தி, மியூசிக் அகாடமி போன்ற புகழ்பெற்ற சபைகளில் பல பரிசுகளை வென்றுள்ளார்.
ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷனில் பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். ஸ்ரீமதி ஜெயந்தி, கர்நாடக இசை மூலம் ஸ்ரீவைஷ்ணவத்தை விளம்பரப்படுத்த தன்னை அர்ப்பணித்துள்ளார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் திவ்யபிரபந்தத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ஸ்ரீமதி ஜெயந்தி ஸ்ரீதரன், 12 ஆழ்வார்களின் 4000 பாசுரங்களை கீர்த்தனை இசை ரீதியாக ஆவணப்படுத்தியிருக்கிறார், மேலும் ஸ்ரீமத் பாகவதம் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தின் கோபிகா கீதம் போன்றவற்றைப் பாடி நமது மகத்தான கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்.
ஸ்ரீமதி ஜெயந்தி ஸ்ரீதரன் Ttd சேனலுக்காக திருமலை பிரம்மோத்ஸவத்திற்காக 9 மணிநேர திவ்யபிரபந்தத்தின் குறுந்தகடு கொடுத்துள்ளார்.
ஆழ்வார் துறவிகளின் முதல் மூவாயிரம் பாசுரங்களை முடித்த அவர் திவ்யபிரபந்தத்தின் முதல் ஆயிரம் மற்றும் இரண்டம் ஆயிரம் ஆகியவற்றை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறார்.
நமது நேசத்துக்குரிய பாரம்பரியத்திற்கும், தமிழ் மொழிக்கும் ஒரு சிறந்த கைங்கர்யம் என்ற வகையில், டில்லி தமிழ்ச் சங்கத்தின் இந்த மேடையில் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறார். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் 75வது வருட பவள விழா ஆண்டு இந்த வருடம் நடைபெற்றுக்கொண்டு உள்ளது. இந்த திருமணத்தில் தில்லித் தமிழ்ச்சங்கத்தில் இந்த நாலாயிர திவ்ய பிரபந்த கீர்த்தனை இசை வடிவத்தை வெளியிடுவதில் பெருமை அடைகின்றோம் என்று கூறினார்.
தில்லி முத்தமிழ்ப் பேரவை துணைத் தலைவர் திருமதி உமா சத்தியமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.