தில்லி வாழ்க்கையில் சந்தித்த ஆளுமைகள்” – சொற்பொழிவு – 24.07.2022.

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 24/07/2022 அன்று மாலை 6.00 மணி அளவில் எழுத்தாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் திரு கி.பென்னேஸ்வரன் அவர்களின் “தில்லி வாழ்க்கையில் சந்தித்த ஆளுமைகள்” என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது.

தொடக்க நிகழ்வில் தில்லித் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் திரு குருமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார்.

தலைமையுரை ஆற்றிய எழுத்தாளர் திரு P.A. கிருஷ்ணன், திரு கி.பென்னேஸ்வரன் எழுத்து, நாடகம், இயக்கம், தயாரிப்பு எனப் பல்வேறு திறமைகளுக்குச் சொந்தக்காரர். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வில் பல்வேறு ஆளுமைகளைச் சந்தித்திருப்பர். ஆனால் சிலரை மட்டுமே நாம் நினைவில் கொள்ளமுடியும் என்றார்.

இந்நிகழ்வில் சொற்பொழிவாற்றிய திரு கி.பென்னேஸ்வரன் தனது வாழ்வில் தில்லி வாழ்க்கையில் தான் சந்தித்த மிகப்பெரிய இலக்கிய ஆளுமைகளுடனான ஏற்பட்ட அனுபவங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நாடகக்குழு, இசைக்கலைஞர்கள் மற்றும் பொதுவான வாழ்க்கையில் தான் சந்தித்த அனைத்து ஆளுமைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

இணைப்பொருளாளர் திரு இராஜ்குமார் பாலா தொகுப்புரை ஆற்றினார்.

முன்னதாக, தில்லித் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் திருமதி இந்துபாலா, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப்பேரவைச் செயல் தலைவர் திரு இரா.முகுந்தன், முன்னாள் பொருளாளர் திரு சத்தியமூர்த்தி, குர்காவூன் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு சக்தி பெருமாள், யதார்த்தா நாடகக் குழுவைச் சேர்ந்த திரு வீரராகவன், திரு பெரியசாமி ஆகியோர் திரு கி.பென்னேஸ்வரனை வாழ்த்திப்பேசினர்.

இணைச்செயலாளர் திரு வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் தில்லித் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள் திரு முரளி, கணேசன், திரு பரமசிவம், சங்கப்பொறுப்பில் இருந்தபோது அவருடன் இணைந்து செயல்பட்டவர்கள் மற்றும் தில்லி வாழ் தமிழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.