பாராட்டு விழா – 02.09.2023

02.09.2023 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதியரசர் திரு எம்.எம். சுந்தரேஷ், நீதியரசர் திரு கே.வி. விஸ்வநாதன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் அவர்கள்

“சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு பால்
கோடாமை சான்றோர்க்கு அணி”

என்றார் திருவள்ளுவப் பெருந்தகை.

அந்த வகையில் இந்திய நீதித் துறையில் தங்களது சீரிய பணியை ஆற்றியதுடன், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்த சான்றோர்களைச் சிறப்பித்துப் போற்றுவதில் பெருமை கொள்கிறோம்.

“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று தலைநகர் தில்லியில் இருந்து கொண்டு முழங்கும் தில்லித் தமிழ்ச் சங்கம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தில்லியில் விருது பெறுவர்களாக இருந்தாலும், உயரிய பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதை பாரம்பரியமாக செய்து வருகிறது.

தமிழ் மண்ணைச் சேர்ந்த மூன்று நீதியரசர்களையும், இந்தியக் குடியரசின் தலைமை வழக்கறிஞரையும் கவுரவிப்பதன் மூலம் தமிழ்ச் சங்கம் பெருமை தேடிக் கொள்கிறது.

நீதி வழுவிய பாண்டியன் தன் இன்னுயிரையே நீத்து கண்ணகிக்கு நீதி வழங்கியது தமிழ். கன்றின் உயிரைப் பறிக்கக் காரணமான மகனையே தேர்க்காலில் வைத்து பசுவுக்கும் நீதி வழங்கிய மனுச்சோழனைக் கொண்டது தமிழ் மண்.

அந்தத் தமிழ் மண்ணின் சிறப்புக்கு மேலும் ஒளியூட்டிய நீதித் துறையின் நால்வரையும் போற்றுவதற்கு சில மணிகள் போதாது. நாட்களே தேவைப்படலாம் என்றும் இன்று இந்தியாவில் நீதிபதிகள் இருந்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கிறார்கள் என்று கூறி அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவிற்கு தலைமை வகித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் திரு ஆர். வெங்கடரமணி அவர்கள் இன்று சங்கத்தில் சங்கமம் மதி நிறைந்த சங்கமம் திருமதிகள் நிறைந்த சங்கமம் என தமிழையும் பற்றியும் தமிழ்ச் சங்கத்தை பற்றியும் தன்னுடன் இணைந்துள்ள நீதியரசர்களை பற்றியும் கவிதையாக பாடினார்.

நீதியரசர் திரு எம்.எம். சுந்தரேஷ் அவர்கள் தகுயுள்ளவர்களை பாராட்டுவது என்பது மிகச் சிறந்த செயல் அதனை தில்லித் தமிழ்ச் சங்கம் மிகச் சிறப்பாக செய்து வருகிறது. வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் கிடையாது ஒவ்வொரு மனிதனும் தன்னை அர்த்தமுள்ளதாக்கி கொள்வதற்கு வாழ்க்கை கொடுக்கும் சந்தர்ப்பம். உயர்ந்த குறிக்கோளோடு தனது கொள்கையை விட்டுக் கொடுக்காமல் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவன் சிறந்த மனிதன் என்றார்.

நீதியரசர் திரு கே.வி. விஸ்வநாதன் அவர்கள் இன்று நாம் நீதி துறையில் இருப்பதற்கு சிறு வயதிலிருந்தே மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் திரு வெங்கட்ரமணி அவர்களின் வழியும், அவர் எழுதிய புத்தகங்கள் வாயிலாகவும் மற்றும் தன்னுடைய சொந்த அனுபவங்கள் மூலமும் இந்த நீதித் துறையில் சிறந்து விளங்கி வருவதற்கு ஒரு காரணமாகும்.

நீதியரசர் திரு வி. ராமசுப்பிரமணியன் அவர்கள் தனது சொந்த அனுபவங்களைப் பற்றியும் கம்பனின் பாடல் வாயிலாக நீதியைப் பற்றி எடுத்துரைத்தார்.

நன்றியுரை கூறிய சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள் அவர்கள் பிரக்யான், சந்தரயான்-3, மற்றும் நீதித்துறையிலும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என உலகெங்கும் இன்று தமிழனின் கொடியே பறக்கின்றது என்றார்.

சங்கத்தின் முன்னாள் இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் திரு பெ. இராகவன் நாயுடு, இணைச் செயலாளர்கள் திருமதி உமா சத்தியமூர்த்தி, டாக்டர் எம். சுந்தர்ராஜன், பொருளாளர் திரு எஸ். அருணாசலம், இணைப் பொருளாளர் திரு வி.என்.டி மணவாளன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி மாலதி தமிழ்ச்செல்வன், திரு தி. பெரியசாமி, திரு ஜெ. சுந்தரேசன், திரு பி. அமிர்தலிங்கம், திரு சி. தங்கவேல் மற்றும் திரு பி. ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.