நடனம் – 19.08.2023.

19.08.2023 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற குரு ஜெயலட்சுமி ஈஸ்வர் மற்றும் அவரது மாணவிகளுடன் சாவ் நடனக் கலைஞர்கள் வழங்கிய “விண்வெளித் தொடர்பு பிரபஞ்சத்துடனான தகவல் தொடர்பு” என்ற தலைப்பில் நாட்டிய நடனம் நடைபெற்றது.

சங்கத்தின் துணைத் தலைவர் திரு பெ. இராகவன் நாயுடு, பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி, இணைப் பொருளாளர் திரு வி.என்.டி. மணவாளன், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி அமுதா பாலமூர்த்தி, திருமதி உஷா வெங்கட் மற்றும் திரு ஜெ. சுந்தரேசன் ஆகியோர் நாட்டியக் கலைஞர்களை கெளரவித்தார்கள்.

நிகழ்ச்சியை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி மாலதி தமிழ்ச்செல்வன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.