23.10.2021 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நகைச்சுவை இமயம், புலவர் இரெ. சண்முகவடிவேல் அவர்களின் தலைமையில் நகைச்சுவை நாள்தேறும் நடமாடுவது வீட்டிலா? வெளியிலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
அதன் ஒலிப்பதிவு
செந்தமிழ்ச் செல்வி ம. எழிலரசி, முனைவர் வேதநாயகி, கவிதாயினி ஜோதி பெருமாள் ஆகியோர் வீட்டிலே என்ற அணியிலும், முனைவர் இரா. அன்பழகன், புலவர் மு. சந்திரசேகரன், கவிஞர் இரா. இராஜ்குமார் பாலா ஆகியோர் வெளியிலே என்ற அணியிலும் சிறப்பாக பேசினார்கள். நகைச்சுவைப் பூக்களால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தலைநகர தமிழர்களை வயிறு குலுங்க குலுங்கச் சிரிக்க வைத்த நகைச்சுவை இமயம், நடுவர் புலவர் சண்முகவடிவேல் அவர்கள் நிறைவாக வீட்டில்தான் நகைச்சுவை அதிகம் நடமிடுகிறது என்று தீர்ப்பாளித்தார். இந்நிகழ்ச்சியில் தில்லி காவல் துறையின் துணை ஆணையர் திரு ஆர். சத்தியசுந்தரம், இ.கா.ப அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச்சாளர்களைக் கெளரவித்தார்.
முன்னதாக சங்கத்தின் துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி அவர்கள் வரவேற்புரை ஆற்ற, இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் செயற்குழு உறுப்பினர் திருமதி ஜோதி ராமநாதன் அவர்கள் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திருமதி தேன்மொழி முத்துகுமார், திரு எஸ், சுவாமிநாதன், திரு பி.ஆர். தேவநாதன், திரு ஆர். கணேஷ் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.