16.02.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரபல எழுத்தாளர் திரு அசோகமித்திரன் பற்றிய ஆவணப்படம் திரையிட்டப்பட்டது. 90 நிமிட ஆவணப்படத் திரையிடலைத் தொடர்ந்து இயக்குனர் திருமதி பிரஸன்னா ராமஸ்வாமி அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமதி பிரஸன்னா ராமஸ்வாமி அவர்களை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி தி. தேன்மொழி அவர்கள் சிறப்பித்தார். உடன் சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், இணைப் பொருளாளர் திரு ஆர். ராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆ. வெங்கடேசன், திரு பி. பரமசிவம், திரு ஆர். கணேஷ் உள்ளிட்டோர்.