மகளிர் தின விழா நிகழ்ச்சிகள் – 12.03.2022.

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 12.03.2022 அன்று மகளிர் தின விழாவை முன்னிட்டு கோலப்போட்டி, அடுப்பில்லா சமையல், பேச்சுப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. மகளிர் தின விழா  கொண்டாட்டத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்கள் “ பெண்ணின் பெருந்தக்க ” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். அவர் தனது உரையில் அன்றைய காலத்தில் உடுத்தும் உடையிலிருந்து உண்ணும் உணவு வரை அடுத்தவர்களாலேயே நிர்ணயிக்கப்பட்டு பெண்கள் அடிமைத்தனமாகவே நடத்தப்பட்டார்கள் என்றால் அது மிகையாகாது. இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனைப் படைத்து வருவது  மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு ஆணும் சமுதாயத்தில் பெண்களை அழகு மற்றும் உடலியல் ரீதியாக மட்டுமே பார்க்காமல், உளம் சார்ந்த ரீதியில் அணுகினால் எந்தப் பெண்ணும் மிகுந்த மகிழ்வுடனும், சாதனைப் படைப்பவளாகவும் திகழ்வாள் என்பது உறுதி. பெண்களுக்கு சொல்ல விரும்புவது  யாதெனில் நீங்கள் நிர்வாகத்தில் பணியாற்றும்பொழுது இச்சைகளுக்கு இடம் கொடாமல், தங்களுடைய திறனில் நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி கண்டு,  உங்களை இழிவாகக் கருதும் சிலரை வீழ்த்தினாலே நீங்கள் மிகப்பெரிய சாதனைப் பெண்மணியாக உருவாவதற்கான துவக்கமாகக் கருதலாம் என்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருமதி டி. உமா (சிறப்பு அதிகாரி, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூகப் பிரிவு, இந்திய வெளியுறவு அமைச்சகம்) பேசுகையில், கிராமத்தில் பிறந்த அவர் பெண்ணாகப் பிறந்ததினால் சமுதாயத்தில் கல்வி, திருமணம், மேற்படிப்பு, மறுமணம், வேலை, குழந்தை என ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், தனக்கு ஏற்பட்ட இன்னல்களை பகிர்ந்ததோடு, அனைத்தையும் தாண்டி இன்று மிகப்பெரிய பொறுப்பில் அமர்ந்து சாதனைப் பெண்மணியாகத் திகழ்வதற்கு தனது விடாமுயற்சியும், ஆர்வமும், அயராத உழைப்பும், சிறிதும் கலங்காத மன உறுதியே காரணம் என்றார். எனவே, ஒவ்வொரு பெண்ணும் வாழ்வில் தனது நோக்கங்களை நிறைவேற்ற உறுதியோடு செயல்படவேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

மகளிர் தின விழா நிகழ்வில் உணவுடன் சேர்த்து மகளிர் ஆரோக்கியம் காக்கும் விதத்தில் தில்லித் தமிழ்ச் சங்க நிர்வாகத்தினர் இலவச மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்திருந்தனர்.

மகளிர் தின விழாவின் ஒருங்கிணைப்பாளர்களாக தில்லித் தமிழ்ச் சங்க இணைச்செயலாளர் திருமதி ஜோதி பெருமாள்,  செயற்குழு உறுப்பினர்கள் திருமதி ஜோதி ராமநாதன், திருமதி தேன்மொழி முத்துக்குமார், திருமதி என். இராஜலட்சுமி அவர்களும் நடுவர் மற்றும் நிகழ்ச்சி நெறியாளர்களாக  திருமதி பிரியா ரெங்கநாதன், திருமதி லட்சுமி குருமூர்த்தி, திருமதி பத்மினி கண்ணன், திருமதி சுபா வெங்கடேசன், திருமதி கௌரி இளங்கோவன், திருமதி ராஜேஸ்வரி கணேசன், நதியா, திருமதி சாந்தி முகுந்தன், திருமதி உமா சத்தியமூர்த்தி, திருமதி ராதா ரகுராமன், திருமதி ஜெயஸ்ரீ குமார், திருமதி மீனா வெங்கி, திருமதி தீபா, திருமதி ராதா, திருமதி ஜெயந்தி ஐயர், திருமதி ஜீவரத்தினம், முனைவர் கல்யாணி பிரபாகரன், திருமதி ராஜேஸ்வரி அன்பரசன், திருமதி ருக்மிணி மகாலிங்கம், திருமதி உஷா வெங்கட், திருமதி பிருந்தா சுந்தரேசன், திருமதி செல்வி சுப்ரமணியன், திருமதி மனோன்மணி சேனாபதி, திருமதி ரமா ஸ்ரீனிவாசன், திருமதி சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திருமதி ஜோதி இராமநாதன் வரவேற்புரை, திருமதி ஜோதி பெருமாள் நன்றியுரையும் ஆற்றினார்கள். திருமதி   சங்கத் தலைவர் திரு வீ.ரெங்கநாதன், துணைத்தலைவர் திரு குருமூர்த்தி, செயலாளர் திரு என்.கண்ணன், இணைச்செயலாளர் திரு ஆ.வெங்கடேசன்,  இணைப்பொருளாளர் திரு இரா.இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு கே.எஸ்.முரளி, திரு பரமசிவம், திரு ஏ.வி.முனியப்பன், முத்தமிழ்ப் பேரவைச் செயலர் திரு இரா முகுந்தன், திரு முத்துக்குமார், திரு ராமநாதன் மற்றும் தில்லி வாழ் தமிழர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.