தவில் கலைஞர் திரு பி.தெட்சிணாமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா – 28.05.2025

28.05.2025 புதன்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற தவில் கலைஞர் திரு பி.தெட்சிணாமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு இரா.முகுந்தன், இணைச் செயலாளர் திருமதி உமா சத்தியமூர்த்தி, பொருளாளர் திரு எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினர்கள் திரு பி. ரங்கநாதன் ஆகியோர் விருந்தினரைக் கௌரவித்தனர்.

ஸ்ரீ சுவாமிநாத சேவா சமாஜத்தின் பொதுச்செயலாளர் திரு ராஜாராமன், இணைச்செயலாளர் திரு பாலமூர்த்தி, இணைச்செயலாளர் திருமதி பூர்ணிமா சுவாமிநாதன், செயற்குழு உறுப்பினர் திரு கணேசன், சண்முகானந்த சங்கீத சபா செயலாளர் திரு கிருஷ்ணஸ்வாமி, மயூர் விஹார் ஃபேஸ்-3 இஷ்ட சித்தி விநாயகர் பொதுச்செயலாளர் திரு கோபாலகிருஷ்ணன் மற்றும் தில்லி வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர் .