சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி – 14.08.2021

14.08.2021 சனிக்கிழமை அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 75 ஆவது சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக செல்வி மாதவி சீதாராமன், செல்வி வைஷ்ணவி சீதாராமன் அவர்களின் தேசப் பக்திப் பாடல்கள் மற்றும் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரு ஜி. ராகவேந்திர பிரசாத் வயலினும், திரு மன்னை என். கண்ணன் மிருதங்கமும், திரு எம். ஸ்ரீராம் கடமும்  பக்கவாத்தியங்களாக வாசித்தார்கள். நிகழ்ச்சிக்கு ரசிகப்பிரியாவின் பொதுச் செயலாளரும், மண்டல போக்குவரத்து அதிகாரியுமான திரு ஆர். ராமநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலைஞர்களை சிறப்பித்தார்.
நிகழ்ச்சியை சங்கத்தின் இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா அவர்கள் தொகுத்து வழங்கினார். செயற்குழு உறுப்பினர் திருமதி ஜோதி ராமநாதன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். துணைத் தலைவர் திரு பி. குருமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இணைச் செயலாளர் திருமதி ஜோதி பெருமாள் அவர்கள் நன்றியுரை நவின்றார்.
நிகழ்ச்சியில் செல்வி மாதவி சீதாராமன், செல்வி வைஷ்ணவி சீதாராமன் ஆகியோருக்கு “இசைச் சகோதரிகள்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கத்தின் பொருளாளர் திரு எம்.ஆர். பிரகாஷ், செயற்குழு உறுப்பினர்கள் திரு ஆர். கணேஷ், திரு பி. பரமசிவம், திரு ஆ. வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.