ஆன்மீக சொற்பொழிவுகள் – 06/07.08.2022

தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் தில்லி முத்தமிழ்ப் பேரவையும் இணைந்து ஜென்மாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் இரண்டு நாள் ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்தியது. இரண்டாவது நாளான 07.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ”கண்ணனுக்கு பின்” என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சு திருநாவுக்கரசர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாதா டிரஸ்ட் சார்பாக திரு வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், கிஞ்சித்காரம் டிரஸ்ட் சார்பாக ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களுக்கும், டெல்லி பஜனை சமாஜ் சார்பாக மறைந்த கே சங்கர் ஐயர் அவர்கள் சார்பாக டி.கே.எஸ் ஹரிஹரன் அவர்களுக்கும், நாவல்பாக்கம் வீரராகவாச்சார் அவர்கள் சார்பாக திரு வி. சீனிவாசன் அவர்களுக்கும், ஆர்.வி ராஜகோபாலன் அவர்கள் சார்பாக திரு ஆர். ஸ்ரீராமன் அவர்களுக்கும், மறைந்த டாக்டர் மணி கிருஷ்ணசாமி அவர்கள் சார்பாக திரு சுதர்சன் அவர்களுக்கும், மறைந்த இராமநாத ஐயர் (விஷ்ணு சகஸ்ரநாம் பாராயணம்) சார்பாக திரு வரதராஜன் அவர்களுக்கும், திரு சுப்பராம பாகவதர் அவர்களுக்கும் மற்றும் உதவும் கரங்கள் சார்பாக திரு எஸ். வித்யாகர் ஆகியோருக்கு விருதுகளும் பொற்கிழியும் வழங்கப்பட்டது. திருமதி மைதிலி கிருஷ்ணன் மற்றும் திரு கிருஷ்ணன் ஆகியோர் விருதுகள் வழங்குவதற்கு பெரிதும் உதவினார்கள்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு வீ. ரெங்கநாதன், ஐ.பி.எஸ், (ஓய்வு), பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைப் பொருளாளர் திரு இரா. இராஜ்குமார் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் திரு பி.ஆர். தேவநாதன், திரு கே.எஸ். முரளி, தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் சார்பாக திருமதி உமா சத்தியமூர்த்தி, திருமதி பத்மினி கண்ணன், திருமதி சாந்தி முகுந்தன் மற்றும் திரு தியாகராஜன் ஆகியோர் விருதாளர்களை கெளரவித்தார்கள்.

இந்நிகழ்ச்சிகளை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் திரு ஆ. வெங்கடேசன் அவர்கள் தொகுத்து வழங்கினார். தில்லி முத்தமிழ்ப் பேரவையின் இணைப் பொருளாளர் திரு எஸ். அருணாசலம் அவர்கள் நன்றி கூறினார்.